போலன் கணவாய்
போலன் கணவாய் பாக்கிஸ்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் தோபா காக்கர் மலைத்தொடரில் அமைந்த கணவாய் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1,793.4 மீட்டர் (5,884 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.இது பாக்கித்தானின் பலுச்சிஸ்த்தானையும், ஆப்கானின் காந்தகாரையும் இணைக்கிறது. இது ஆப்கன் எல்லையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தெற்காசியாவிற்குள் நுழைவதற்கு இதுவும் கைபர் கணவாயும் தான் வழியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் (சுதந்திரத்துக்கு முன்) உள்ள முக்கிய கணவாய்களில் ஒன்று.[2][3][4]1880-களில் இங்கு இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. பிராகுயி மொழி மற்றும் பலூச்சி மொழி பேசும் இன மக்கள் இப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்களுள் வைத்திருந்தனர். இம்மக்கள் இன்றளவும் பாக்கித்தானின் பலுச்சிஸ்த்தான் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பிராகுயி மக்கள் பிராகுயி மொழி என்னும் திராவிட மொழி பேசும் இனத்தவர். புவியியல்போலன் கணவாய் கடல் மட்டத்திலிருந்து 1,793.4 மீட்டர் (5,884 அடி) உயரத்தில் தோபா காக்கர் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia