மகாபாஷ்யம்மகாபாஷ்யம், பாணினியின் வட மொழி இலக்கண நூலான அஷ்டாத்தியாயீயின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சூத்திரங்களுக்கு பதஞ்சலி ஒரு விளக்க உரையை சமஸ்கிருத மொழியில் கிமு 2ஆம் நூற்றாண்டில் இயற்றினார்[1][2][3] அதற்கு மகாபாஷ்யம் என்று பெயராகும். மகாபாஷ்யத்தில் காத்தியாயனரின் 1400 இலக்கண விளக்க உரைகளும் அடங்கும்.[4] சமஸ்கிருத மொழியின் மூன்று பெரிய இலக்கண அறிஞர்களில் பதஞ்சலியும் ஒருவர். மற்ற இருவர், பாணினி மற்றும் காத்தியாயானர் ஆவார். காத்தியாயானர் (கிமு 140) எழுதிய வர்த்திகா-சூத்திரம் எனும் இலக்கண நூல் விளக்கும் சீக்ஷா (உச்சரிப்பு உள்ளிட்ட ஒலியியல்), வியாகரணம் (இலக்கணம் மற்றும் உருவவியல்) மற்றும் நிருக்தம் (சொல் இலக்கணம்) இவை மூன்றும் மகாபாஷ்யத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. படைப்பு காலம்பதஞ்சலியின் மகாபாஷ்யம் நூலின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என நம்பப்படுகிறது. புஷ்யமித்திர சுங்கன் ஆட்சிக் காலத்தில் பதஞ்சலி முனிவர் புஷ்யமித்திரன் செய்த அஸ்வமேத யாகத்தில் பதஞ்சலியும் கலந்து கொண்டார் என்பதை மகாபாஷ்யம் நூலின் மூலம் அறியமுடிகிறது. யவனர்கள் சாகேதம் என அழைக்கப்படும் அயோத்தி மற்றும் மத்யமிகா மீதான படையெடுப்பின் போது பதஞ்சலி உடனிருந்தார்.. எனவே, மகாபாஷ்ய மற்றும் மஹாபாஷ்யகர் பதஞ்சலி ஆகிய இரண்டின் காலங்களும் கிமு 2 ஆம் நூற்றாண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிமு 2ஆம் நூற்றாண்டு மௌரியப் பேரரசின் பிராமணத் தளபதியான புஷ்யமித்ர சுங்கன், இறுதி மௌரிய மன்னர் பிரகத்திர மௌரியனைக் கொன்று அரியணை ஏறினார். பல்வேறு பண்டிதர்களின் கூற்றுப்படி மகாபாஷ்யத்தின் காலம், கிமு 200 முதல் கிமு 140 வரை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் ஆகும். முக்கியத்துவம்"பதஞ்சலி" தனது மகாபாஷ்யத்தில் சமஸ்கிருத மொழி இலக்கணத்தை வேதாங்க அடிப்படையில் விவாதித்துள்ளார். இதுவே மகாபாஷ்யத்தின் முக்கியத்துவத்திற்குக் காரணம். இலக்கியக் கண்ணோட்டத்தில், மகாபாஷ்யாவின் உரைநடை மிகவும் செயற்கையானது, மொழியியல் நடை சரளமானது மற்றும் தெளிவானது. பத்ருஹரி அதற்கு விளக்கம் எழுதியிருந்தார் ஆனால் பெரும்பாலானவை கிடைக்கவில்லை. சமஸ்கிருத இலக்கணத்தில் முனிவர்களுக்கு மிக உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. அஷ்டாத்தியாயீ, எழுதிய பாணினி, வர்த்திக்கா எழுதிய காத்தியாயானர் மற்றும் மகாபாஷ்யம் எழுதிய பதஞ்சலியை முப்பெரும் முனிவர்கள் எனப்போற்றப்படுகின்றனர்.. பதஞ்சலி மஹாபாஷ்யத்தின் மூலம் வர்த்திகங்களின் விளக்கத்தை முன்னெடுத்தது. பல இடங்களில் காத்யாயனரின் இலக்கண விதிகளுக்கு மறுத்து, பாணினியத்தின் செல்லுபடியை நிரூபித்துள்ளார். சில சமயங்களில் காத்யாயனரால் விடுபட்ட அந்த சூத்திரங்களும் மகாபாஷ்யத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
ஆதார நூல்கள்
உதவிய நூல்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia