மசித் மசிதி
மசித் மசிதி (Majid Majidi) (مجید مجیدی, பிறப்பு 17 ஏப்ரல் 1959, தெஹ்ரான்) ஓர் உலகப் புகழ் பெற்ற ஈரான் நாட்டுத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர். வாழ்க்கை வரலாறுமசித் மசிதி நடுத்தர ஈரானிய குடும்பம் ஒன்றில் பிறந்தார். தனது 14ஆம் வயதில் ஆர்வமுறை நாடகக் குழுக்களில் நடிக்கத் தொடங்கினார். பிறகு, தெஹ்ரானில் உள்ள நாடகக் கலைகள் பயிலகத்தில் கற்றார். 1979இல் நடந்த ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, அவரது திரைப்பட ஆர்வத்தின் காரணமாக, 1985இல் மோசன் மக்மால்பஃப் இயக்கி வெளிவந்த பேகாட் (திரைப்படம்) போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2004 வரை, மசிதி மட்டுமே சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே ஈரானிய இயக்குநர் ஆவார். 1998ஆம் ஆண்டு, இவரது சில்ரன் ஆப் ஹெவன் திரைப்படம் இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், இவ்விருது லைப் இசு பியூட்டிப்புல் என்ற இத்தாலியத் திரைப்படத்திற்குக் கிடைத்தது. மசிதி, சில்ரன் ஆப் ஹெவன் திரைப்படத்துக்குப் பிறகு மூன்று திரைப்படங்களை இயக்கி உள்ளார்: தி கலர் ஆப் பாரடைசு (2000), பரன் (2001), தி வில்லோ டிரீ (2005; மாற்று ஆங்கிலப் பெயர் ஒன் லைப் மோர்). Barefoot to Herat என்று முழு நீள ஆவணப்படத்தை உருவாக்கினார். இத்திரைப்படம், 2001இல் நடந்த தாலிபான் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போதும் அதற்குப் பிறகும் ஏதிலிகள் முகாம்களில் இருந்து வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் முன்னோட்டமாக, பெய்சிங் நகர் அறிமுகப்படம் உருவாக்குவதற்காக சீன மக்கள் குடியரசு அழைத்த ஐந்து உலகத் திரைப்பட இயக்குநர்களில் மசிதியும் ஒருவர்.[1] திரை வாழ்க்கை: இயக்கம்
விருதுகளும் பெருமைகளும்மசித் மசிதி பல விருதுகளும் பெருமைகளும் பெற்றுள்ளார். அவற்றுள் சில:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia