மஞ்சம்பட்டி
மஞ்சம்பட்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மஞ்சம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 221.32 மீ. உயரத்தில், (10°03′36″N 78°10′36″E / 10.0599°N 78.1766°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு மஞ்சம்பட்டி அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், மஞ்சம்பட்டி ஊரின் மொத்த மக்கள்தொகை 2,421 பேர் ஆகும். இதில் 1,212 பேர் ஆண்கள் மற்றும் 1,209 பேர் பெண்கள் ஆவர்.[3] சமயம்இந்துக் கோயில்அய்யனார் கோயில் என்ற கிராமக் கோயில் ஒன்று மஞ்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4] அரசியல்மஞ்சம்பட்டி பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia