மஞ்சு சர்மா (உயிரியலாளர்)
மஞ்சு சர்மா (Manju Sharma, 13 திசம்பர் 1940 – 31 அக்டோபர் 2024)[1] ஓர் இந்திய உயிரித் தொழில்நுட்பவியலாளரும், இந்தியாவில் பல அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கொள்கை உருவாக்கும் அமைப்புகளின் நிர்வாகியும் ஆவார். இவர் குசராத்தின் காந்திநகரில் உள்ள இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். முன்னர் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் உயிரித் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக பணியாற்றினார்.[2] 2007இல் பத்ம பூசண் விருது பெற்றார்.[3] பணிகள்இந்தியாவின் பல முன்னோடி உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இவரது பங்கு இருந்தது.[4] தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம், இலக்னோ, தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம், மதுரை உயிரி ஆராய்ச்சி மையங்கள் தில்லி பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் பிரிவு, டி.என்.ஏ கைரேகை மற்றும் நோயறிதலுக்கான மையம் உள்ளிட்ட பல நிறுவனங்களை நாட்டில் நிறுவுவதில் இவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.[5] வாழ்க்கைமஞ்சு சர்மா, கல்வியாளரும் அரசியல்வாதியுமான மதன் மோகன் மாளவியாவின் பேத்தியாவார். இவர், மலேரியா நோய் வல்லுநரும் பூச்சியியல் வல்லுநரானமான வினோத் பிரகாஷ் சர்மாவை மணந்தார். இவர்களது மகன் அமித் சர்மா, புரத படிகவியல் நிபுணத்துவம் பெற்றவர்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia