மண்டகப்பட்டு
மண்டகப்பட்டு (Mandagappattu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மண்டகப்பட்டு ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மண்டகப்பட்டு கிராமத்தின் மக்கள் தொகை 1,965 ஆகும்.[4] சிறப்பு![]() மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவிலாகக் கருதப்படும் மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலான இலக்சிதன் கோயில் எனும் மண்டகப்பட்டு திருமூர்த்தி கோவில் இங்கு அமைந்துள்ளது. இதுவே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது. இக்கோயில். தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது. மிகவும் எளிய, எழில் வாய்ந்த குடைவரைக் கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia