மதகொண்டப்பள்ளி
மதகொண்டப்பள்ளி (Mathagondapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், மதகொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] வரலாறுஇந்த ஊரில் உள்ள அத்தீஸ்வரர் கோவிலில் உள்ள போசள மன்னர் வீர விசுவநாதன் காலக் கல்வெட்டுன் படி இந்த ஊரின் பழையபெயர் மத்தகாமண்டன் பள்ளி என்று தெரியவருகிறது.[2] மக்கள் வகைப்பாடுஇவ்வூரானது மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 66 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 329 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1148 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4979 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2514, பெண்களின் எண்ணிக்கை 2565 (51.5 %) என உள்ளது. கிராமத்தில் கல்விறிவு பெற்றவர்கள் 3324 (66.8 %) ஆவர்.[3] ஊரில் உள்ள வழிபாட்டுத் தலங்கள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia