நாகரசம்பட்டி
நாகரசம்பட்டி அல்லது நாகோஜனஹள்ளி (Nagojanahalli), என்ற ஊரானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பேரூராட்சிக்குட்பட்ட என். தட்டக்கல் கிராமத்தில் திப்புசுல்தான் காலத்திய கோட்டை உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருப்பதால் பென்னேசுவரமடம் சிவன் கோவில் என அழைப்பர். அமைவிடம்இப்பேரூராட்சிக்கு 25 கி.மீ. தொலைவில் கிருஷ்ணகிரி உள்ளது. இதன் கிழக்கில் ஊத்தங்கரை 30 கி.மீ.; மேற்கில் பாலக்கோடு 40 கி.மீ.; வடக்கில் காவேரிப்பட்டணம் 15 கி.மீ.; தெற்கில் காரிமங்கலம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 40 கி.மீ. தொலைவில் பாலக்கோடு உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு14.87 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 59 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,483 வீடுகளும், 9,953 மக்கள்தொகையும் கொண்டது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia