மதராஸ் கஃபே (திரைப்படம்)
மதராஸ் கஃபே (Madras Cafe) என்பது 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அரசியல் கலந்த பாலிவுட் இந்தி மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். சூஜித் சிர்க்கார் இதனை இயக்கினார்.[3][4] ஜான் ஆபிரகாம் இந்தியப் புலனாய்வுத்துறை முகவராகவும்[1], நர்கிசு ஃபாக்ரி பன்னாட்டு ஊடகவியலாளராகவும் இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஈழப்போர் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது.[1][5] இதன் தலைப்பு ஆரம்பத்தில் ஜாஃப்னா (Jaffna) எனப் பெயர் வைக்கப்பட்டது.[6] 2013 ஆகஸ்ட் 23இல் இது வெளியிடப்பட்டது[7]. நடிகர்கள்
படம் பற்றிய சர்சைஇந்தத் திரைப்படம் தொடர்பாக தமிழகத்தில் பெரும்பான்மையான (பாமக,மதிமுக,நாம் தமிழர்) அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன, காரணம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தவறாக சித்தரித்து பாத்திரம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.[10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia