மத்தியமகேஷ்வர் கோயில்
மத்தியமகேஷ்வர் (Madhyamaheshwar) (சமக்கிருதம்: मध्यमहेश्वर) இந்திய மாநிலமான உத்தரகண்டின் இமயமலைப் பகுதியில் 3497 மீட்டர் உயரத்தில் கார்வால் கோட்டத்தில் உள்ள ருத்திரபிரயாக் மாவட்டத்தின் மன்சூனா கிராமத்தில் உள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலைக் கோயில் ஆகும். ஐந்து கேதார தலங்களில் இக்கோயில் நான்காவதாகும்.[1] நந்தி இவ்விடத்தில் சிவபெருமானாக காட்சியளிப்பதாக கருதுகின்றனர். இக்கோயிலை பாண்டவர்கள் கட்டியதாக கருதப்படுகிறது.[2] வழிபாடு![]() கோடை காலங்களில் மட்டும் திறந்திருக்கும் இக்கோயில், குளிர்காலத்தில் கோயில் மூலவரான சிவலிங்கத்தை உக்கிமத் எனுமிடத்தில் வைத்து பூசை செய்கின்றனர். போக்குவரத்துசாலை வழியாக பஞ்ச கேதார தலங்களை சுற்றி வருவதற்கு 170 கிலோ மீட்டர்களும், 16 நாள்களும் ஆகும். குப்தகாசியிலிருந்து காளிமடத்திற்கு செல்லும் கேதார்நாத் கோயிலை இணைக்கும் சாலையில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மகேஷ்வர் கோயில் இமயமலையில், கடல் மட்டத்திலிருந்து 1319 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia