மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம்
மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம் (Central Sanskrit University) இந்தியாவின் புதுதில்லி நகரில் அமைந்துள்ளது. முன்னதாக இது இராசுட்ரிய சமசுகிருத சன்சுதான் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 1970 ஆம் ஆண்டில் சமசுகிருத மொழியை மேம்படுத்துவதற்காக இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.[1] பல்கலைக்கழகம் இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்கள், இளநிலை கல்வியியல் மற்றும் முதுநிலை கல்வியியல் பட்டங்களுக்கான கற்பித்தல் இங்கு நடைபெறுகிறது. 2020ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இந்தியப் பாராளுமன்றம் மத்திய சமசுகிருத பல்கலைக்கழக சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலையிலிருந்து மூன்று பல்கலைக்கழகங்கள் மத்தியப் பல்கலைக்கழகம் என்ற உயர் தகுதிக்கு மேம்படுத்தப்பட்டன. 1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறீ லால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருத பல்கலைக்கழகம் மற்றும் 1961ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம் போன்றவையும் இத்தகுதியைப் பெற்ற மற்ற இரண்டு பல்கலைக்கழகங்களாகும்.[2][3] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia