மத்திய நேரடி வரிகள் வாரியம்மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) என்பது இந்தியாவின் நேரடி வரிச் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள அரசு நிறுவனமாகும். இது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய அரசின் வருவாய்த் துறையின் ஒரு பகுதியாகும். இது 1963இல் நிறுவப்பட்டது. மத்திய நேரடி வரிகள் வாரியமானது தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களைக் கொண்டது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி, நிறுவன வரி, செல்வ வரி மற்றும் மூலதன ஆதாய வரிகளை பொதுமக்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கிறது. இவ்வாரியத்தின் கீழ் வருமான வரித் துறை மற்றும் வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம் உள்ளிட்ட 8 இயக்குநரகங்கள் செயல்படுகிறது. நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் செயல்படும் துறைகள்வாரிய உறுப்பினர்கள்மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். இதன் பிற 6 உறுப்பினர்களை நிதி அமைச்சரால் நியமிக்கப்படுகிறார்கள். இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஆவார். வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.[1]
முதன்மை செயல்பாடுகள்
இதனையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia