மந்திரவாதியின் பிரமிடு
மந்திரவாதியின் பிரமிடு (The Piramid of the Magician) மெக்சிக்கோவின் பண்டைய மாயன் நாகரீகத்தின் இடையமெரிக்கப் பண்பாட்டு நகரமான ஊக்சுமலில் அமைந்துள்ள ஒரு படிக்கட்டு பிரமிடு ஆகும். இது உக்சுமலில் உள்ள மிக உயரமான மற்றும் மிகவும் அடையாளம் காணக்கூடிய கட்டமைப்பாகும். விளக்கம்மந்திரவாதியின் பிரமிடு என்பது உக்சுமலின் மாயன் இடிபாடுகளில் உள்ள மைய கட்டமைப்பாகும்.[1] உக்சுமல் மெக்சிகோவின் புயுக் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. மேலும், யுகடான் தீபகற்பத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். அதன் உச்சத்தில், உக்சுமலில் சுமார் 25,000 மக்கள் வசித்து வந்தனர். பிற புயுக் தளங்களைப் போலவே, இந்த நகரமும் கிபி 1 முதல் செழித்திருந்தது. கிபி 700 முதல் 1000 வரை பெரிய கட்டுமானங்களும் நடந்தது. மாயன் மொழியில் உக்சுமல் என்ற பெயருக்கு 'மூன்று முறை கட்டப்பட்டது' என்று பொருள். அதன் மிகவும் கம்பீரமான கட்டமைப்பின் கட்டுமானத்தின் பல அடுக்குகளைக் குறிக்கிறது. உலக பாரம்பரிய தளம்சடங்கு கட்டமைப்புகளின் இடிபாடுகள் அவற்றின் வடிவமைப்பு, அமைப்பு மற்றும் அலங்காரத்தில் மறைந்த மாயா கலை மற்றும் கட்டிடக்கலையின் உச்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால் உக்சுமல் நகரம் 1996 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. மந்திரவாதியின் பிரமிடு வளாகம் மையத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும், நடு நுழைவாயிலில் அமைந்துள்ளது. இது நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, அதன் மேற்கு முகம் நன்னேரி நாற்கரத்தை நோக்கி உள்ளது மற்றும் அதன் மேற்கு படிக்கட்டு கோடைகால கதிர்த்திருப்பத்தில் மறையும் சூரியனை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. கட்டுமானம்முதல் பிரமிடு கோயிலின் கட்டுமானம் கிபி 6ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அடுத்த 400 ஆண்டுகளில் இந்த அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது..கி. பி. 1000 க்குப் பிறகு பிரமிடு பழுதுபார்க்கப்படாமல் இருந்ததால் இடிந்து விழுந்தது. அதன்பிறகு எசுப்பானியா யூகடான் வெற்றியின் போது கொள்ளையடிக்கப்பட்டது. இடிபாடுகளின் மறு கண்டுபிடிப்பு பற்றிய முதல் விரிவான விவரம் 1838 ஆம் ஆண்டில் ஜீன்-ஃபிரடெரிக் வால்டெக் என்பவரால் வெளியிடப்பட்டது. உக்சுமல் பற்றிய வால்டெக்கின் விவரிப்பு, ஜான் லாயிட் இசுடீபன்ஸ் மற்றும் அவரது நண்பர் பிரடெரிக் கேதர்வுட் ஆகியோரை 1839–1841 ஆம் ஆண்டில் அந்த இடத்திற்கு இரண்டு நீண்ட வருகைகளை மேற்கொண்டு, வளாகத்தின் அமைப்பைப் பதிவுசெய்து வரைவதற்குத் தூண்டியது. அவரது குறிப்புகளிலிருந்து, இசுடீபன்ஸ் தனது பிரபலமான பயண நிகழ்வுகளை யுகடானில் வெளியிட்டார். ![]() ![]() இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia