மனோன்மணீயம்

சி. பாலசுப்பிரமணியனை பதிப்பாசிரியராகக் கொண்டு 1992 இல் வெளியிடப்பட்ட மனோன்மணீயம் நூலின் அட்டைப்படம்

மனோன்மணீயம் என்பது ஒரு நாடக நூல் ஆகும். தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையாக இது போற்றப்படுகிறது. முழுவதும் செய்யுள் நடையிலேயே அமைந்துள்ள இந்நூல் பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளையால் எழுதிப் பாரதிதாசன் பிறந்த ஆண்டான 1891-இல் வெளியிடப்பட்டது.

லிட்டன் பிரபு என்னும் ஆங்கிலேயர் எழுதிய ”இரகசிய வழி” (The se​cret way) எனும் நூலைத் தழுவி மனோன்மணீயத்தை ஓர் இன்பியல் (comedy) நாடகமாக இதனை எழுதியுள்ளார் சுந்தரம்பிள்ளை[1]. வரலாற்றுத் தொடர்புடையது போன்றும் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போன்றும் எழுதப்பட்டுள்ள ஒரு கற்பனைப் புதினம் ஆகும். இந்த நூலில் 5 அங்கம் 20 களம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

1855-ஆம் ஆண்டு பிறந்த சுந்தரனார் 1877-78-இல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம் பிரம்ம கீதை, சூதசம்ஹிதை, பெருந்திரட்டு ஆகியவை காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் "பரமாத்துவித" என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தை எழுதினார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இதனை எழுதினார். 1855-ஆம் ஆண்டு பிறந்த உ.வே.சாமிநாதையரிடம் கொடுத்துத் திருத்தங்கள் செய்து கொண்டார்[2].

இந்த நாடகம், பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள "நீராருங் கடலுடுத்த நிலமடந்தை" என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழகம், மற்றும் அனைத்துத் தமிழர் வாழும் இடங்களில் ஒலிக்கிறது.

பதிப்புகள்

1891-ஆம் ஆண்டு பிறந்த பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் அவர் பிறந்த ஆண்டிலே நூலாக வெளிவந்த மனோன்மணியம் என்ற நூலினை 1922-ஆம் ஆண்டில் மீள்பதிப்பித்தார்[3].

மேற்கோள்கள்

  1. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 20- பக்கம்: 25 பதிப்பு:2014, இளங்கணி பதிப்பகம், சென்னை
  2. *"மனோன்மணீயம்" சுந்தரனார், முனைவர் கி. முப்பால்மணி, தினமணி
  3. மதுரைத்திட்டத்தில் எஸ். வையாபுரிப்பிள்ளையின் “இலக்கிய தீபம்”

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya