சி. பாலசுப்பிரமணியன்
சின்னசாமி பாலசுப்பிரமணியன் (மே 3, 1935 - செப்டம்பர் 10, 1998)[1] தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். தமிழக ஆளுநராக இருந்த கே. கே. ஷாவிற்குத் தமிழ் கற்பித்தவர். பிறப்புஇன்றைய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் 3 மே 1935[2] அன்று பட்டம்மாள் - பொ. சின்னசாமி முதலியார் (மளிகைப்பொருள் வணிகர்) இணையருக்கு மகனாகப் பிறந்தார் பாலசுப்பிரமணியன்.[3][4] இவர் செங்குந்தர் கைக்கோளர் குலத்தைச் சேர்ந்தவர்.[5] கல்விபள்ளிக்கல்விசி.பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை விக்டோரியா தொடக்கப்பள்ளியில் 1941-1942ஆம் ஆண்டில் முதலாம் வகுப்புப் பயின்றார். பின்னர் கல்வியாண்டு 1942-43 தொடங்கி 1947-48 முடிய கண்டாச்சிபுரம் உயர்தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயின்றார். ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வியாண்டு 1948-49 தொடங்கி 1950-51வரை திருவண்ணாமலை உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.[1][2] கல்லூரிக்கல்விசென்னை அரசினர் கலைக்கல்லூரியில் 1951-1953ஆம் கல்வியாண்டுகளில் இடைநிலைக்கல்வி (Intermediate) பெற்றார். தொடர்ந்து 1953-1957ஆம் கல்வியாண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழிலக்கியத்தில் கலை இளவர் (சிறப்பு) பட்டம் பெற்றார். 1958ஆம் ஆண்டில் அப்பட்டம் கலைமுதுவர் பட்டமாக உயர்த்தப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் மு.வ., அ.ச.ஞா., க.அன்பழகன். அ.மு.பரமசிவானந்தம், இரா.சீனிவாசன், வடிவேலு நாயக்கர், சுப்பிரமணிய ஆச்சாரியார், இரா. நடேச நாயக்கர், ஏ.ஆர். முத்தையன், த.கு.முருகேசன், அ.க. பார்த்தசாரதி ஆகியோரிடமும் கூட்டுவகுப்பில் மாநிலக்கல்லூரியில் தெ.பொ.மீ., மொ. அ. துரை அரங்கனார் ஆகியோரிடமும் பயின்றார்.[1] பல்கலைக்கழகக்கல்விகுறுந்தொகை - திறனாய்வு (A Critical Study of Kuruntokai) என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, 1963 ஆம் ஆண்டில், ஆய்வு நிறைஞர் (எம்.லிட்.) பட்டமும் சேரநாட்டு செந்தமிழ் இலக்கியங்கள் - ஓர் ஆய்வு (A Study of the literature of the Cera Country) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து, 1970 ஆம் ஆண்டில் முனைவர் (பி. எச்டி) பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1] பணிஇவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பயிற்றுநராக 1957ஆம் ஆண்டில் தனது பணியைத் தொடங்கி, விரிவுரையாளராக உயர்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நுழைந்து, பேருரையாளராக, பேராசிரியராக உயர்ந்தார். 1976 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு முதல் [6] 1989ஆம் ஆண்டு வரை தமிழ்மொழித் துறைத் தலைவராகப் பணியாற்றினார். துணைவேந்தர்1989 திசம்பர் 4ஆம் நாள் முதல் 1992 திசம்பர் 3ஆம் நாள் வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். எழுதிய நூல்கள்
பதிப்பித்த நூல்பெற்ற விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia