மரபார்ந்த இயக்க மின்னியல்
மரபார்ந்த மின்காந்தவியல் (Classical electromagnetism) அல்லது மரபார்ந்த இயக்க மின்னியல்) (classical electrodynamics) மின்மங்களுக்கும் மின்னோட்டங்களுக்கும் இடையேயான மின்காந்த விசைகளின் தாக்கங்களைக் குறித்து ஆய்கின்ற இயற்பியல் பிரிவாகும். நீளங்களும் புல வலிமைகளும் பெரியதாக குவாண்டம் விசையியல் தாக்கங்களை புறக்கணிக்குமளவில் இருக்கும்போது இது மின்காந்த நிகழ்வுகளைக் குறித்த சிறப்பான விளக்கங்களை வழங்குகிறது. (இல்லாதுபோனால் பார்க்க:குவாண்டம் இயக்க மின்னியல்) மரபார்ந்த இயக்க மின்னியலின் அடிப்படை இயற்பியல் கூறுகளை பெயின்மான், லெய்டன் மற்றும் சான்ட்சு,[1] பனோவ்ஸ்கியும் பிலிப்சும்,[2] மற்றும் ஜாக்சன்[3] வழங்கியுள்ளனர். மின்காந்தவியல் கருதுகோளை 19வது நூற்றாண்டில், மிக முக்கியமாக ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்லால் மேம்படுத்தப்பட்டது. இது குறித்த விவரமான வரலாற்று பதிவிற்கு பவுலி,[4] விட்டேகர்,[5] மற்றும் பெய்சு[6] நூல்களை படிக்கலாம். மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia