மருதநாட்டு வீரன்
மருதநாட்டு வீரன் 1961 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜமுனா, பி. எஸ். வீரப்பா, கண்ணாம்பா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2] திரைக்கதைச் சுருக்கம்ஜீவகன் ஒரு துணிச்சலான இளைஞன். இளவரசி இரத்னாவின் தலைமைக் காவலனாக அவன் நியமிக்கப்படுகிறான். அவனுக்கும் இளவரசிக்குமிடையில் காதல் மலர்கிறது. வீரகேசன் என்பவன் அரசனின் அமைச்சராக இருக்கிறான். இந்த அரசின் விரோதியான சுல்தான் ஒருவனுடன் வீரகேசன் தொடர்பு கொண்டு சதிச் செயலில் ஈடுபட்டிருக்கிறான். வீரகேசன் ஜீவகன் மீது தேசத்துரோகக் குற்றஞ்சாட்டி அரசரும் நாட்டு மக்களும் ஜீவகனை வெறுக்கும்படி செய்து விடுகிறான். ஜீவகன் தான் நிரபராதி என நிரூபித்து நாட்டையும் அரசரையும் சூழ்ச்சியிலிருந்து எப்படிக் காப்பாற்றுகிறான் என்பதே மீதிக்கதை. நடிகர்கள்
தயாரிப்புக் குழு
பாடல்கள்திரைப்படத்துக்கு இசையமைத்தவர் எஸ். வி. வெங்கட்ராமன். பாடல்களை இயற்றியோர்: கண்ணதாசன், ஏ. மருதகாசி. பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், ஏ. எல். ராகவன், பி. சுசீலா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia