மர்ஜானே சத்ரபி
மர்சான் சத்ராப்பி (Marjane Satrapi பாரசீகம்: مرجان ساتراپی) (பிறப்பு 22 நவம்பர் 1969) ஈரானில் பிறந்த பிரஞ்சு கார்ட்டூனிஸ்ட், திரைப்பட இயக்குநர், மற்றும் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதுபவர். வாழ்க்கை வரலாறு1969 இல் ஈரானிலுள்ள ரஷ்த் என்ற இடத்தில் பிறந்தவர் மர்ஜானே சத்ரபி. சோஷலிச சமூக அமைப்பை நிறுவுவதற்கான போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் பாரம்பரியம் கொண்ட முற்போக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர்.[3] 1979 இல் தனது 14 வயதில் தலைநகர் தெகரானில் உள்ள பிரெஞ்சு பள்ளியில் மர்ஜி படித்துக் கொண்டிருந்த காலத்தில் இஸ்லாமியப் புரட்சி நடைபெற்றது. அது கொடுங்கோல் மன்னர் ஷாவுக்கு எதிரானது. அப்போது ஈரான்-ஈராக் போர் வெடித்தது. இது போன்ற உள்நாட்டு நெருக்கடிகளால் மர்ஜி ஈரானில் படிப்பது நல்லதில்லை என்று அவளுடைய பெற்றோர் கருதி பள்ளிப் படிப்புக்காக ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவுக்கு மர்ஜியை அனுப்பினார்கள்.[4] முதல் நாவல்கறுப்பு வெள்ளை கோடுகள் என்பது அவரது முதல் சித்திர நாவல். உலகப் புகழ்பெர்சேபோலிஸ் (Persepolis) என்ற அவரது சுயசரிதை சித்திர நாவல், அவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. 20 ஆண்டு கால ஈரானின் வரலாற்றைச் சொல்லும் அந்த சித்திர நாவல், சிறந்த அரசியல் ரீதியிலான படைப்பு. பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது இந்த சித்திர நாவல்.[4] பெர்சேபோலிஸ் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. வின்சென்ட் பார்னோவுடன் இணைந்து மர்ஜியே இந்த அனிமேஷன் படத்தை இயக்கினார். உலகின் மதிப்புமிக்க திரைப்பட விழாவான கான் திரைப்பட விழாவில், 2007ஆம் ஆண்டில் அது நடுவர் விருதைப் பெற்றது. ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia