மர்மக் கிரகம்
நிபிரு (Nibiru) என்பது நாசா நிறுவனம் அனுப்பிய கபுள் (Hubble) என்ற செயற்கைக் கோள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்புக் கோள் ஆகும். இருப்பினும் இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரு கோளானது பிளானட் எக்சு (Planet-X) எனவும் அறியப்படுகிறது. இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அது 2012 இல் பூமியை நெருங்கும் எனவும் சொல்லப்பட்டது. இது ஒளியற்ற கோள் என்பதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் நம்புகின்றனர். மர்மக் கிரகம் (Planet X) எனவும் அழைக்கப்படும் இது சூர்யக் குடும்பத்தில் உள்ள தேடப்படும் கிரகமாகும். இது நெப்டியூன் கிரகத்தைத் தாண்டி (புளூட்டோ தவிர்த்து) இருக்கிறது.[1] கண்டுபிடிப்புமர்மக் கிரகம் என்ற வாதத்தை முதலில் லோவல் (பெர்சிவால் உலோவெல்) என்ற வானியலார் 1846ஆம் ஆண்டு முன் வைத்தார்.
யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்கள் சில சமயங்களில் தன் ஓடுபாதையிலிருந்து சிறிது விலகி பயணிக்கிறது. இந்நிகழ்வு வேறொரு கிரகத்தின் அதிக ஈர்ப்பு விசையால் நிகழ்கிறது என்று அனுமானித்தார்.[2][3] இதற்கு வியாழன் அளவு நிறை இருக்கலாம்.
அதனால் மேலுள்ள 2 வழிகளும் கடினமானவையே. பெயர் காரணம்நிபிரு கோள் பற்றி சுமேரியர் (Sumerian) நாகரிக மக்கள் எழுதியக் கல்வெட்டுகளிலும் கிடைத்தது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் மெசபடோமியாவில் (Mesopotamia) (ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே) வாழ்ந்த சுமேரியர்கள் அதற்கு 'நிபிரு' (Nibiru) என்று பெயரிட்டிருந்தனர். சுமேரியர்களின் சித்திர எழுத்துகளையும், கல்வெட்டுகளையும் படித்த போதுதான் அதற்கு விடை கிடைத்தது. அதன்படி சுமேரிய மொழியில் 'நிபிரு' என்றால் இடைவெட்டும் கோள் (Crossing Planet) என்று அர்த்தம்.[4] அமைப்பும் சர்ச்சையும்
இன்னொரு சூரியன் நமது சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ளதாகவும், நிபிரு மிகவும் வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் இரண்டு சூரியன்களையும் சுற்றுவதாகவும் சொல்கின்றனர். இன்றைய நிலையில், அதாவது 2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்று நாம் சொல்லும் நிலையில், ஒரு வருடத்துக்கு முன் நிபிரு கோள் பூமியிலிருந்து 5.8 வா.அ (AU) (Astronomical Unit) தூரத்தில் இருக்கிறது (ஒரு வா.அ = 149 598 000 கிலோமீட்டர்கள் ஆகும்). அதன் சுற்றும் வேகத்தில் ஆறு மாதங்களில் 2.9 வா.அ தூரத்தில் இருக்கும். மூன்று மாதங்களில் 1.7 AU, ஒரு மாதத்தில் 0.64 வா.அ என்று மிக அண்மிக்கும். உலகம் அழியும் தினத்திற்கு முதல் நாளான, 20ம் திகதி டிசம்பர் 2012 இல் 0.024 வா.அ தூரத்தில் நிபிரு கோள் இருக்கும். அதாவது வெறும் 35 இலட்சம் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும். இது அண்ணளவாக பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் தூரத்தின் அரைவாசி தூரம். இப்போது இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது நமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத தூரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள். ஒரு நட்சத்திரம் என்றால் அதன் ஒளியை வைத்துக் கண்டு பிடிப்பது சிரமம் இல்லை. ஆனால் ஒரு கோளை அண்டத்தின் இருட்டில் கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரணமல்ல. ஆனாலும் நாசா அதைக் கண்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலமாகவே இருக்கிறது. இந்தக் கோள் பற்றிய இரகசியத்தை நாசா மறைத்து வைத்திருக்கிறது என்று, அமெரிக்கப் பத்திரிகைகளான 'நியூயார்க் டைம்சு' (New York Times), தி வாசிங்டன் போசுட் (The Washington Post) ஆகியன கூட வெளிப்படையாக செய்தி வெளியிட்டன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia