மறுமலர்ச்சி (1956 திரைப்படம்)
மறுமலர்ச்சி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், ஸ்ரீராம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3] இப்படம் 16, நவம்பர், 1956 அன்று வெளியானது.[1] போலி அந்தஸ்த்து, ஆடம்பர வாழ்வு போன்றவற்றால் ஏற்படும் சிக்கல்களை சொல்லுவதாக இந்தப் படம் அமைந்துள்ளது. நடிகர்கள்பிலிம் நியூஸ் ஆனந்தன் தரவுத்தளத்திலிருந்தும்[1] திரைக்களஞ்சியம் புத்தகத்திலிருந்தும் உள்ள தகவல்களைத் தழுவிய பட்டியல்.[4]
தயாரிப்புசி. வி. ரெட்டி தயாரித்த இப்படத்தை கே. எஸ். பிரகாஷ் ராவ் மற்றும் லங்கா சத்யம் ஆகியோர் இயக்கினர். கதையை டி. பி. தர்மா ராவும், எஸ். ஏ. சுப்புராமனும் எழுதினர். உரையாடலை எஸ். ஏ. சுப்புராமன் மற்றும் பி. நாகேஸ்வரராவ் ஆகியோர் எழுதியுள்ளனர். ஜாகீர்தார், ஆர். ஆர். சந்திரன், முகுந்தன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். வீரப்பனும், மார்த்தாண்டமும் படத்தொகுப்பை மேற்கொண்டனர். கலை இயக்கத்தை கோட்வாங்கரும், மற்றும் நடனத்தை வேம்பட்டி சத்யமும் கையாண்டார். ஒளிப்படங்களை சத்யம் எடுத்தார்.[1] இப்படம் தெலுங்கில் மெலுக் கொலுப்பு என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.[1] இசைஇப்படத்திற்கு பெண்டியாலா நாகேஸ்வர ராவ் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை எம். எஸ். சுப்ரமணியம் எழுதினார்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia