மலபார் சிறிய மின்சிட்டு

மலபார் சிறிய மின்சிட்டு (அறிவியல் பெயர்: Pericrocotus cinnamomeus malabaricus) என்பது சிறிய மின்சிட்டின் துணையினம் ஆகும்.[1]

விளக்கம்

மலபார் சிறிய மின்சிட்டு அளவிலும் பிற பழக்க வழக்கங்களிலும் தெற்கத்திய சிறிய மின்சிட்டை ஒத்து இருக்கும். இதன் தொண்டையில் மட்டும் நல்ல கறுப்பு நிறம் உள்ளது. இந்த வேறுபாடே இப்பறவையை ஒரு தனி துணையினமாக பிரித்தறிய காரணமாயிற்று.[2]

வாழிடம்

மலபார் சிறிய மின்சிட்டு தென்னிந்தியாவின் கேரளத்திலும், மேற்கு கருநாடகத்திலும் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. "Pericrocotus cinnamomeus (Small Minivet) - Avibase". avibase.bsc-eoc.org. Retrieved 2022-06-29.
  2. 2.0 2.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 382.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya