சிறிய மின்சிட்டு
சிறிய மின்சிட்டு (Small Minivet)(பெரிகுரோகாக்டசு சின்னமோமியூசு) என்பது ஒரு சிறிய குருவி சிற்றினம் ஆகும். இந்த மின்சிட்டு வெப்பமண்டல தெற்கு ஆசியாவில் இந்திய துணைக்கண்டத்திலிருந்து கிழக்கே இந்தோனேசியா வரை காணப்படுகிறது. விளக்கம்சிறிய மின்சிட்டு 16 செ.மீ. நீளமுடையது. இது கருமையான வலிமையான அலகினை கொண்டுள்ளது. நீண்ட இறக்கைகளையும் கொண்டது. ஆண் மின்சிட்டானது பிற மின்சிட்டுக்களிலிருந்து பளபளப்பற்ற சாம்பல் மேல் பகுதி மற்றும் தலை, ஆரஞ்சு நிற கீழ் பகுதிகள், வயிற்றுப் பகுதி, ஆரஞ்சு நிற வால் விளிம்புகள், மூலம் வேறுபடுகிறது.[2] பெண் மின்சிட்டின் மேல்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் கீழ்ப்பகுதியும் முகமும் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இந்த சிறிய மின்சிட்டுகளில் இன வேறுபாடுகள் மிகுதியாக உள்ளன. துணையினங்கள்[3]
நடத்தைசிறிய மின்சிட்டு என்பது முள் காடு மற்றும் புதர்க்காடுகளில் இனப்பெருக்கம் செய்யும் பறவையாகும். கூடு என்பது ஒரு கோப்பை வடிவ அமைப்பாகும். இதில் இரண்டு முதல் நான்கு வரை, புள்ளிகளுடன் கூடிய முட்டைகள் இடும். பெண் மின்சிட்டுகள் முட்டைகளை அடைகாக்கும். இந்த மின்சிட்டு மரங்களில் உள்ள பூச்சிகளைப் பறந்து பிடிப்பதன் மூலமோ அல்லது அமர்ந்திருக்கும்போதோ பிடிக்கிறது. சிறிய மின்சிட்டு சிறிய மந்தைகளாகக் காணப்படும். படங்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia