மலேசியத் தீபகற்பம் - ரப்பர் மற்றும் பாமாயில் processing and manufacturing, light manufacturing industry, மின்னனு சாதனங்கள், tin mining and smelting, logging and processing timber, சுற்றுலாத்துறை, எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு, logging
மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சியிலும் உலகத்தொடர்புடைய பொருளாதாரத்தை உள்ளடக்கியதாகவும், புதிய தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இடம்பெறத்தக்கதாகவும் மேலும் சந்தைப் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது.[6][7] 2007ல் மலேசியப் பொருளாதாரம் தென்கிழக்காசிய நாடுகளில் மூன்றாவது இடத்திலும் பொருள் வாங்குதிறன் சமநிலையில் உலக அளவில் 28வது இடத்திலும் இருந்தது. 2008ஆம் ஆண்டு உள்நாட்டு பொருள் உற்பத்தி $222 பில்லியனாக இருந்தது.[8] 2007லிருந்து வளர்ச்சி விகிதம் 5% முதல் 7 சதவீதமாகும்[9] 2010ல், மலேசிய மக்களின் நபர்வரி வருவாய் US$14,700 ஆக இருந்தது.[10] 2009ல், மொஉஉ US$383.6 பில்லியனாகவும், தனிநபருக்கான மொ.உ.உ US$8,100 ஆகவும் இருந்தது.[11]
இந்த தென்கிழக்காசிய நாடு 20வது நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியும் உள்கட்டமைப்பு வசதியையும் பெற்றதுடன் புதிய தொழில்துறை நாடாக தனிநபருக்கான மொஉஉ $14,800 ஆக இருந்தது.[12][13] 2007ல் வருவாய் பரவலில் 5.8 மில்லியன் குடும்பங்கள் கண்டறியப்பட்டு. அதில், 8.6% சதவீதம் மாத வருவாயாக RM1,000 ம் , 29.4 சதவீதம் பேர் RM1,000 க்கும் RM2,000 வரை, 19.8% மக்கள் RM2,001 க்கும் RM3,000 வரை; 12.9% மக்கள் RM3,001 க்கும் RM4,000 வரையிலும் மற்றும் 8.6% மக்கள் RM4,001 க்கும் RM5,000 வரை வருவாய் பெற்றனர். கடைசியாக, 15.8சதவீத குடும்பங்கள் RM5,001 க்கும் RM10,000 வரையிலும் 4.9 சதவீத மக்கள் RM10,000 மற்றும் அதற்கு மேல் வருவாய் பெற்றனர்.[14]