மல பரிசோதனைமல பரிசோதனை (Stool test) என்பது ஒரு மருத்துவ நோயறிதல் நுட்பமாகும். இது மலத்தினை சேகரித்து பகுப்பாய்வு செய்வதை உள்ளடக்கியது. நுண்ணுயிர் பகுப்பாய்வு (பண்பாடு), நுண்ணோக்கி மற்றும் இரசாயன சோதனைகள் ஆகியவை மல மாதிரிகளில் செய்யப்படும் சோதனைகளில் அடங்கும். சேகரிப்புமல மாதிரிகள் சேகரிக்கப்பட்டவுடன் கூடிய விரைவில் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் மற்றும் ஆய்வகத்தால் பெறப்படுவதற்கு முன்பு குளிரூட்டப்படக்கூடாது.[1] காட்சி பரிசோதனைஅலுவலகத்தில் அல்லது படுக்கையில் இருக்கும் நோயாளி மற்றும்/அல்லது சுகாதாரப் பணியாளர் சில முக்கியமான அவதானிப்புகளைச் செய்ய முடியும்.
புற்றுநோய் பரிசோதனைபெருங்குடல் புற்றுநோய் அல்லது வயிற்றுப் புற்றுநோய் உட்பட இரைப்பை குடல் அமைப்பில் ஏற்படும் இரத்தபோக்கின் பல நிலைகளைக் கண்டறிய மலத்தில் மறைந்துள்ள இரத்த பரிசோதனை மற்றும் மல நோயெதிர்ப்பு வேதியியல் சோதனை பொதுவாக மேற்கொள்ளப்படும் மல பரிசோதனை ஆகும்.[2] மலத்தில் நோயெதிர் சோதனைக்கு ஆதரவாக, பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனையான ஜிஎபோபிடியினை கைவிடுமாறு அமெரிக்க இரைப்பை கல்லூரி பரிந்துரைத்துள்ளது.[3] புதிய மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சோதனைகள் குளோபின், டி. என். ஏ. அல்லது டிரான்ஸ்பெரின் உள்ளிட்ட பிற இரத்தக் காரணிகளை ஆய்கின்றன. இதே சமயம் வழக்கமான மல குயாக் சோதனைகள் ஹீமைத் தேடுகின்றன. புற்றுநோய்கள், முன்கூட்டிய புண்கள், அசாதாரண உயிரணுக்களை மலத்தில் வெளியேற்றும்.[4] புற்றுநோய்கள் மற்றும் முன்கூட்டிய புண்கள் (பாலிப்சு) அல்லது மலம் கழிப்பதன் மூலம் தேய்க்கப்படுவதால் மலத்தில் இரத்தம் சிந்தலாம், இது ஹீமோகுளோபின் மதிப்பீட்டின் மூலம் கண்டறியப்படலாம்.[4] அமெரிக்கப் புற்றுநோய் சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் தடுப்பு சேவை ஆகியவை[5] வருடம் ஒருமுறை மல நோயெதிர்ப்பாற்றல் வேதிப்பரிசோதனையுடன் பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனையையும் பரிந்துரைக்கின்றன. பிற சோதனை விருப்பங்களில் சிக்மாய்டோஸ்கோபி அல்லது மெய்நிகர் பெருங்குடல் நோக்கி (வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி மலக்குடல் வரைவி) ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அல்லது ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடங்கும். அதிக தவறான-நேர்மறை விகிதம் மற்றும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடுகள் காரணமாக மலத்தில் மறைந்துள்ள இரத்த பரிசோதனை பரிந்துரைக்கப்படவில்லை.[5][6] தர உத்தரவாதத்திற்கான தேசியக் குழு 2017ஆம் ஆண்டிற்கான சுகாதார பயனுறு திறன் தரவு மற்றும் தகவலுக்கான ஒரு புதுப்பிப்பை வெளியிட்டது. அதே சமயம் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நோயாளிகளுக்கு இது குறித்த வழிகாட்டுதல் இருக்கும்.[7] 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அறிகுறியற்ற, சராசரி ஆபத்துள்ள பெரியவர்களுக்கு நோய் முன்கணிப்புப் பரிசோதனையாக அமெரிக்க உணவு மருந்தால் பல-இலக்கு-மல டி. என். ஏ. சோதனை ஆகத்து 2014-ல் அங்கீகரிக்கப்பட்டது.[8] 2017ஆம் ஆண்டின் ஆய்வில், மலக்குடல் வரைவி அல்லது மலம் மறைந்த இரத்தப் பரிசோதனையுடன் ஒப்பிடும்போது இந்தச் சோதனை செலவு குறைந்ததாகக் கண்டறியப்பட்டது.[9] மூன்று வருடப் பல-இலக்கு மல டி. என். ஏ சோதனையானது, முன்கணிப்புப் இல்லாததுடன் ஒப்பிடும்போது , தர-சரிசெய்யப்பட்ட வாழ்நாள் ஆண்டுக்கு $11,313 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[10] நுண்ணுயிரியல் சோதனைகள்ஒட்டுண்ணி நோய்களான அஸ்கரியேசிஸ், கொக்கிப்புழு, ஸ்ட்ராங்லோயிடியாசிஸ் மற்றும் சாட்டைப்புழு ஆகிய புழு இளம் உயிரிகள் அல்லது முட்டைகள் உள்ளதா என்பதை நுண்ணோக்கியில் மலத்தை ஆய்வு செய்வதன் மூலம் கண்டறியலாம். சில பாக்டீரியா நோய்களை மலத்தினைக் கொண்டு ஆய்வுக்கூட வளர்ப்பின் மூலம் மூலம் கண்டறியலாம். குளோசுட்ரிடியம் டிபிசில் ("கு. டிப்") போன்ற பாக்டீரியாவிலிருந்து வரும் நச்சுகளையும் அடையாளம் காணலாம். ரோட்டா வைரசு போன்ற தீநுண்மிகள் மலத்திலும் காணப்படும்.[11] இரசாயன சோதனைகள்முலைப்பால் வெல்லம் தாளாமை அல்லது தொற்று இருப்பதைக் கண்டறிய மல கார அமிலச் சோதனையினைப் பயன்படுத்தப்படலாம்.[12] மல கொழுப்பு சோதனையினைப் பயன்படுத்தி ஸ்டீட்டோரியாவைக் கண்டறியலாம். இது கொழுப்பின் உட்கிரகித்தலில் உள்ள குறைபாட்டினை காணப் பயன்படுகிறது.[13] மல எலாசுடேசு நொதியின் அளவு கணைய அழற்சி நோயறிதலின் முக்கிய அம்சமாக மாறி வருகிறது. மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia