மாகதிப் பிராகிருதம் (மாகதி) என்பது பாலி மற்றும் சமசுகிருதத்தின் வீழ்ச்சிக்குப்பின் பண்டைய இந்தியாவில் வழங்கி வந்த எழுத்து மொழிகளான மூன்று நாடகப் பிராகிருத மொழிகளில் ஒன்றாகும். இது முற்கால வேதச் சமக்கிருத மொழியைப் பிரதியீடு செய்த வட்டார நடு இந்தோ-ஆரிய மொழிகளுள் ஒன்றாகும்.[3] இன்றைய கிழக்கு இந்தியா, வங்காளத்தேசம் மற்றும் நேபாளம் ஆகியவற்றை உள்ளடக்கிய கிழக்கு இந்தியத் துணைக்கண்டப்பகுதிகளில் மாகதிப் பிராகிருதம் பேசப்பட்டு வந்தது. இது தற்கால வங்காளம், பிகார், கிழக்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் பேசப்பட்டு வந்ததுடன், சில நாடகங்களில் பேச்சு வழக்கு உரையாடல்களில் பயன்படுத்தப்பட்டது. இம்மொழி, முக்கிய சமயத் தலைவர்களாகிய கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோரால் பேசப்பட்ட மொழியாக நம்பப்படுவதோடு[4] மகத மகாசனபதம் மற்றும் மௌரியப் பேரரசின் அரசவை மொழியாகவும் பயன்படுத்தப்பட்டது. சில அசோகர் கல்வெட்டுக்கள் இம்மொழியில் எழுதப்பட்டுள்ளன.[5]
மாகதிப் பிராகிருதம் பிற்காலத்தில் கிழக்கு இந்தோ-ஆரிய மொழிகளாக உருவெடுத்தது, அவையாவன:[1][6]
↑ 1.01.1South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, By Peter J. Claus, Sarah Diamond, Margaret Ann Mills, Routledge, 2003, p. 203
↑Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "மாகதிப் பிராகிருதம்". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
↑Cardona, George; Jain, Dhanesh, eds. (2003), "The historical context and development of Indo-Aryan", The Indo-Aryan Languages, Routledge language family series, London: Routledge, pp. 46–66, ISBN0-7007-1130-9