மாகிம் கடற்கழி![]() மாகிம் கடற்கழி (Manori Creek) என்பது இந்தியாவின் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சிற்றோடை ஆகும்.[1] உள்ளூரில் பந்த்ரா சி காதி என்றும் இந்த கழிமுகம் அழைக்கப்படுகிறது. மித்தி ஆறு இந்த சிற்றோடைக்குள் பாய்ந்து, பின்னர் மாகிம் விரிகுடாவில் கலக்கிறது. பம்பாய் நகரத்திற்கும் புறநகர்ப் பகுதிகளுக்கும் இடையிலான எல்லையை மாகிம் கடற்கழி உருவாக்குகிறது. சதுப்பு நிலங்களால் சூழப்பட்டு ஒரு சிறிய சுற்றுச்சூழல் மண்டல அமைப்பைக் கொண்டுள்ளது. இப்போது மாகிம் கடற்கழியின் இருபுறமும் பெருநிறுவன அலுவலகங்களுடன் பாந்த்ரா குர்லா வளாகம் அமைந்துள்ளது. இச்சிற்றோடையின் ஆழம் 15 அடி (4.6 மீ). சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள் மாகிம் கடற்கழியில் கொட்டப்படுவதால், சிற்றோடையின் நீர் துர்நாற்றம் வீசுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், நீர்நிலைகளைச் சுற்றியுள்ள சேரிகளில் காளான்கள் பெருகி வருவது மும்பையின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு இன்றியமையாத இச்சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் மீது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ஏராளமான அத்துமீறல்கள் நடந்துள்ளன. மேலும் டைம்சு ஆஃப் இந்தியா செய்தித்தாள் 2021ஆம் ஆண்டில் தொடர் கட்டுரைகள் மூலம் இவற்றை அம்பலப்படுத்தியுள்ளது.[2] 2006 ஆம் ஆண்டில், மாகிம் கடற்கழியின் நீர் "இனிப்பாக" மாறிவிட்டதாக ஆயிரக்கணக்கானோர் கூறியதால், இது ஒரு பிரபலமான தளமாகவும் இருந்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia