மாதவி முத்கல்
மாதவி முத்கல் (Madhavi Mudgal) ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞராவார். இவர் ஒடிசி நடன நடைக்கு பெயர் பெற்றவர். 1984இல் சமசுகிருத விருது, 1990இல் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மசிறீ விருது, [1] 1996இல் ஒடிசா மாநில சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் 1997இல் பிரான்சின் கிராண்டே மெடெய்ல் டி லா வில்லே உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். 2000இல் சங்கீத நாடக அகாதமி விருது, 2002இல் தில்லி மாநில பரிசத் சம்மன், மற்றும் 2004 இல் நிருத்யா சூடாமணி பட்டம் போன்றவற்றையும் பெற்றுள்ளார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சிபுது தில்லியில் இந்துஸ்தானி இசைமற்றும் பாரம்பரிய நடனத்திற்கான மிகவும் பிரபலமான நடனப் பள்ளிகளில் ஒன்றான கந்தர்வ மகாவித்யாலயத்தின் நிறுவனர் பேராசிரியர் வினய் சந்திர முத்கல் என்பவருக்கு மகளாக மாதவி முத்கல் பிறந்தார். சிறந்த கல்வித் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற விஜயா முலே எழுதிய ஏக் அனெக் அவுர் ஏக்தா என்ற இயங்கு படத்தில் படத்தில் ஹிந்த் தேஷ் கே நிவாசி என்ற பாடலுக்கு பேராசிரியர் வினய் சந்திர முத்கலின் இசைக்காக சிறந்த முறையில் நினைவுகூரப்படுகிறார். [2] முத்கல் தனது குடும்பத்தினரிடமிருந்து கலை மற்றும் நடனத்தின் மீது ஆழ்ந்த அன்பைப் பெற்றார். இவரது குரு சிரீ அரேகிருட்டிண பெகெராவின் சரியான வழிகாட்டுதலின் கீழ், இவரது அசாதாரண திறன்களைப் பற்றி உலகம் விரைவில் தெரிந்துகொண்டது. இவர் தனது 4 வயதில் தனது முதல் பொது நிகழ்ச்சியை வழங்கினார். [3] ஆரம்பத்தில் இவர் பரதநாட்டியம் மற்றும் கதக் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். ஆனால் இறுதியாக இவர் ஒடிசியை தனது வெளிப்பாட்டு ஊடகமாகத் தேர்ந்தெடுத்தார். புகழ்பெற்ற குரு கேளுச்சரண மகோபாத்திராவின் பயிற்சியின் கீழ் இவரது ஒடிசி கலைத் திறன்கள் மிகச் சிறந்தவையாக விளங்கியது. தொழில்நடனக் கலை பற்றிய ஆழமான நுண்ணறிவு மற்றும் ஒடிசியின் சிறந்த நுணுக்கங்களுக்கு புதிய நடனக் கலைஞர்களைப் பயிற்றுவிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் இவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இவர் உலகளவில் பரவலாகப் பாராட்டப்படுகிறார். [4] உலகெங்கிலும் இடம்பெறும் நடன விழாக்களில் நிகழ்த்தப்படும் இவரது நடனப் படைப்புகள் விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. அவற்றில் இங்கிலாந்தின் எடின்பர்க் சர்வதேச விழாவும் அடங்கும்; அமெரிக்காவில் இந்திய விழா; செர்வாண்டினோ விழா, மெக்சிகோ; வியன்னா நடன விழா, ஆஸ்திரியா; இந்திய நடன விழா, தென்னாப்பிரிக்கா; இந்திய கலாச்சார விழா, சாவோ பாலோ, பிரேசில்; இந்திய கலாச்சாரத்தின் நாட்கள், ஹங்கேரி; இந்திய கலை விழா, லண்டன்; அவிக்னான் விழா, பிரான்ஸ்; பினா பாஷின் விழா, வுப்பர்டல் மற்றும் பெர்லின் ஃபெஸ்ட்பைல், ஜெர்மனி; மற்றும் இத்தாலி, ஸ்பெயின், லாவோஸ், வியட்நாம், மலேசியா, ஜப்பான் மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் திருவிழாக்கள் போன்றவை. ஒலி-ஒளி விளக்கக்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் இந்தியாவில் பரவலாக பாராட்டப்பட்ட சிறப்பு நடன விழாக்களின் அமைப்பு மூலம் ஒடிசியை இந்தியாவின் முக்கிய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாக நிறுவுவதில் இவர் ஒரு தலைமைப் பாத்திரத்தை வகித்தார். [4] இவரது குரு கேளுச்சரண மகோபாத்திரா இவரை தனது சீடராக ஏற்றுக்கொண்ட தருணம் தான் தனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் என்று இவர் நினைக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கைஇவரது சகோதரர் மதுப் முத்கல் பத்மஸ்ரீ விருது வென்றவராவார். கயல் மற்றும் பஜனை தொகுப்புகளுக்கு பரவலாக அறியப்பட்டவர். சுஜாதா முத்கல் ஒரு இசையமைப்பாளராகவும், நிகழ்ச்சி நடத்துனராகவும் மற்றும் 1995 முதல் புது தில்லியில் உள்ள கந்தர்வ மகாவித்யாலயாவின் முதல்வராகவும் இருந்து வருகிறார். [5] [6] மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia