மாதவி (2009 திரைப்படம்)
மாதவி (Madhavi) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் பரபரப்புத் திரைப்படம் ஆகும். முருகாஸ் இயக்கிய. இப்படத்தில் சஜித் ராஜ், புதுமுகம் மோகனா, ராம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிழல்கள் ரவி, ரேகா, வடிவுக்கரசி, மாறன், கவிதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். எஸ். முருகன் தயாரித்த இப்படத்திற்கு, ராஜேஷ் ராமலிங்கம் இசை அமைத்துள்ளார். படமானது 25 செப்டம்பர் 2009 அன்று வெளியானது. இந்த படம் தெலுங்கில் துரோகம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1][2] நடிகர்கள்
தயாரிப்புமுருகாஸ் இயக்குநர் பி. வாசுவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். ஜிமாஸ் கிரியேஷன் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட படமான மாதவி வழியாக இயக்குநராக அறிமுகமானார். இவர் பி. வாசுடன் இணைந்து மன்னன் (1992), சந்திரமுகி (2005) போன்ற படங்களில் பணியாற்றினார். மாதவி படத்தில் கதாநாயகனாக நடிக்க சஜித் ராஜ் தேர்வு செய்யப்பட்டார், புதுமுகம் மோகனா கதாநாயகியாக நடித்தார். ஒரு பெண் தன் காதலனுடன் ஓடிப்போன ஒரு காதல் கதையை அவர் இப்படத்தில் கையாண்டதாக இயக்குநர் கூறினார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதமுள்ள கதைப் பகுதியாகும். இந்த கதையின் முக்கிய அம்சமாக ஏமாற்றுவது உள்ளது. படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மலேசியாவில் படமாக்கப்பட்டது.[3][4][5] இசைதிரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் அமைத்தார். இப்படத்தின் இசைப் பதிவில் கபிலன், முருகாஸ் ஆகியோர் எழுதிய ஐந்து பாடல்கள் உள்ளன.[6][7]
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia