ரேகா |
---|
 |
பிறப்பு | ஜோஸ்பின் ஆகத்து 28, 1970 (1970-08-28) (அகவை 54) ஆலப்புழா, கேரளா |
---|
பணி | திரைப்பட நடிகை |
---|
செயற்பாட்டுக் காலம் | 1986–1996 2002-தற்போது வரை |
---|
வாழ்க்கைத் துணை | ஹாரிஸ் (1996 - தற்போது வரை) |
---|
ரேகா என்று அழைக்கப்படும் ஜோஸ்பின் 28 ஆகத்து 1970 என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார். பெரும்பாலும் தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் மலையாளத் திரைப்படத்துறையில் பரவலாக அறியப்படும் நடிகை ஆவார்.
இவர் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், யே ஆட்டோ, சகரம் சாக்சி உள்ளிட்ட மலையாள வெற்றித் திரைப்படங்களிலும், புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] கேரளாவில் பிறந்த இவர் தமிழகத்தின் உதகையில் தனது படிப்பை முடித்தார்.[2] இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.[3] இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் திரைப்படத்திற்காக பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் கடலுணவு ஏற்றுமதியாளரை 1996ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[4]
தொலைக்காட்சி
நடித்த திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
தெலுங்குத் திரைப்படங்கள்
பெற்ற விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்