மாத்துகுமள்ளி வித்யாசாகர்
மாத்துகுமள்ளி வித்யாசாகர் (Mathukumalli Vidyasagar) (பிறப்பு செப்டம்பர் 29 1947) ஓர் முன்னணி கட்டுப்பாட்டியல் கொள்கையாளரும் அரச கழகத்தின் சக கூட்டாளாருமாவார்.[1] ஐதராபாத்தின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் துறையில் பேராசிரியராக உள்ளார். முன்னதாக இவர் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறையின் தலைவராக இருந்தார். அதற்கு முன்னர் இவர் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தில் நிர்வாக துணைத் தலைவராக இருந்தார். அங்கு இவர் மேம்பட்ட தொழில்நுட்ப மையத்திற்கு தலைமை தாங்கினார். முன்னதாக, பெங்களூரிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் (சிஐஆர்) மையத்தின் இயக்குநராக இருந்தார். இவர் பிரபல கணிதவியலாளர் மா. வெ.சுப்பாராவின் மகனாவார். இவரது எர்டெஸ் எண் இரண்டு மற்றும் இவரது ஐன்ஸ்டீன் எண் மூன்று.[2] கல்விமேடிசனிலுள்ள விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, முனைவர் ஆகியவற்றை முடித்தார்.[3] தொழில்இவர் 1969 இல் மார்க்வெட் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் [3] விருதுகள்வித்யாசாகர் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். அவற்றுள்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia