இந்தியாவின் ஆந்திராவின்குண்டூரிலுள்ளயழாலி என்ற சிறிய கிராமத்தில் சுப்பாராவ் பிறந்தார். 1941இல், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் ஆர். வைத்தியநாதசுவாமி அறிவுறுத்தலின் பேரில் செயல்பாட்டு பகுப்பாய்வில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் சென்னை, மாநிலக்கல்லூரியிலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்திலும், மிசூரி பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் 1963 ஆல்பெர்டா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது தொழில் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தைக் கழித்தார்.[3] ஒரு சிறந்த ஒத்துழைப்பாளரான சுப்பாராவ் 40க்கும் மேற்பட்ட கூட்டு ஆசிரியர்களைக் கொண்டிருந்தார் ( இவருக்கு எர்டெஸின் நம்பர் 1 ஐ வழங்கிய பால் எர்டெஸ் உட்பட ).[4][5][6] இவர் தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் கணித ஆவணங்களைத் தொடர்ந்து தயாரித்தார். இவர் தனது 84 வயதில் எட்மண்டனில் இறந்தார்.[7][8]
↑Ono, K. (1996). "Parity of the partition function in arithmetic progressions". Journal für die reine und angewandte Mathematik472: 1–15. doi:10.1515/crll.1996.472.1.
↑Radu, S. (2012). "A proof of Subbarao's conjecture". Journal für die reine und angewandte Mathematik672: 161–175. doi:10.1515/crelle.2011.165.
↑Newman, M. (November 1960). "Periodicity modulo m and divisibility properties of the partition function". Transactions of the American Mathematical Society97 (2): 225–236. doi:10.2307/1993300.