மாநிலப் பல்கலைக்கழகம்இந்தியாவில், மாநில பல்கலைக்கழகம் (State university) என்பது இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களின் மாநில அரசால் நிதியளிக்கப்பட்டு நடத்தப்படும் பல்கலைக்கழகங்களாகும். 1950ல் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கல்வி என்பது மாநிலப் பட்டியலிலுள்ள அதிகாரமாக மாறியது. 1976இல் அரசியலமைப்பு மாற்றத்தைத் தொடர்ந்து, இது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாக மாறியது.[1] மார்ச் 17, 2021ஆம் ஆண்டின் படி, பல்கலைக்கழக மானியக் குழு 426 மாநிலப் பல்கலைக்கழகங்களைப் பட்டியலிட்டுள்ளது.[2] பல்கலைக்கழக மானியக்குழு சட்டம்1956ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டப் பிரிவு 12 (பி) ப.மா.கு.வுக்கு "ஆணைக்குழுவின் நிதியிலிருந்து, பல்கலைக்கழகங்களுக்கு மானியங்களை ஒதுக்க மற்றும் வழங்குவதற்கான உரிமையை வழங்குகிறது."[3] எனவே, ப.மா.கு. மாநில பல்கலைக்கழகங்களை "ப.மா.கு. சட்டம் - 1956இன் பிரிவு 12 (பி)இன் கீழ் மத்திய/ப.மா.கு. உதவியைப் பெறுவதற்குத் தகுதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது" என்று வகைப்படுத்துகிறது, அல்லது வெளியிடப்படவில்லை, மேலும் வெளியிடப்பட்ட பட்டியல்களில் இந்த நிலையைக் குறிப்பிடுகிறது.[2] இந்த அறிவிப்புகளுக்கான புதுப்பிப்புகள் ப.மா.கு. கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.[4] 2021 மே 17 அன்று ப.மா.கு. வெளியிடப்பட்ட அண்மைய பட்டியல், 252 பல்கலைக்கழகங்கள் மத்திய/ப.மா.கு. உதவியைப் பெறத் தகுதியானவை என்று பட்டியலிடப்பட்டுள்ளது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia