மாராய வஞ்சி

தமிழ் இலக்கணத்தில் மாராய வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "மாராயம்" என்பது ஒரு வகைச் சிறப்பு விருது. மன்னனிடமிருந்து இவ்வகை விருது பெறும் வீரர்களின் தன்மையைப் பொருளாகக் கொள்வதால் இத்துறை "மாராய வஞ்சி" எனப் பெயர் பெற்றது.

இதனை விளக்க, வீரம் மிக்க மன்னனால் சிறப்புச் செய்யப் பெற்றவரும், வெற்றியை வழங்கும் வேற்படையைக் கையில் ஏந்தியவருமான வீரர்களின் நிலையைக் கூறுவது[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

மற வேந்தனின் சிறப் பெய்திய"
விறல் வேலோர் நிலையுரைத் தன்று

எடுத்துக்காட்டு

நேராரம் பூண்ட நெடுந்தகை நேர்கழலான்
சேரார்முனை நோக்கிக் கண்சிவப்பப் - போரார்
நறவேய் கமழ்தெரியல் நண்ணார் எறிந்த
மறவேல் இலைமுகந்த மார்பு
- புறப்பொருள் வெண்பாமாலை 43.

குறிப்பு

  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 75

உசாத்துணைகள்

  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya