மார்கரெட் தியோடோரா மேயர்
மார்கரெட் தியோடோரா மேயர் (Margaret Theodora Meyer) (செப்டம்பர் 1862 – 27 ஜனவரி 1924), (மவுடு மேயர் எனப்பட்டவர்)[2] ஒரு பிரித்தானியக் கணிதவியலாளர் ஆவார். இவர் கணிதவியல் ஆராய்ச்சியில் இயக்குநரும் இலண்டன் கணிதவியல் கழகத்தின் முதல் உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார்.[3] இவர் 1916 இல் அரசு வானியல் அழக ஆய்வுறுப்பினராகத் தேர்வாகிய முதல் பெண்மணியாவார்.[4] வாழ்க்கைமேயர் அயர்லாந்து, டைரோன், சுட்டிராபேனில் பிறந்தார். இவரது தந்தையார் பிரெசுபைட்டரிய அமைச்சர் தியோடோர் யோனா மேயர் ஆவார்; தாயார் ஜேன் ஆன் ஆவார். இவருக்குச் சர் வில்லியம் சுட்டீவென்சன் மேயர் என்றொரு அண்ணன் உண்டு. இவரது இந்தியாவில் முதல் பிரித்தானிய ஆணையராகப் பணிபுரிந்தார்.[4] மேயர் பெரிதும் தன் இளமைக் காலத்தை இத்தாலியில் கழித்தார். இவர் வடக்கு இலண்டன் கல்லூரி மகளிர் பள்ளியில் படித்தார். இவர் 1879 இல் கேம்பிரிட்ஜ் கிர்ட்டன் கல்லூரியில் சேர்ந்தார். இவர் அங்கு 1882 இல் பல்கலைக்கழகப் 15 ஆம் விரேங்கிளராக கணிதவியலில் தேர்வுபெற்றார். இவர் 1907இல் அட் எனண்டம் முதுகலைப் பட்டம் டப்ளின் டிரினிட்டி கல்லூரியால் வழங்கப் பெற்றார்.[5] இவர் 1882 முதல் 1888 வரை இலண்டனில் உள்ள நாட்டிங்கில் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தார். பின்னர் கிர்ட்டன் கல்லூரியில் கணிதவியல் விரிவுரையாளர் ஆனார். இங்கு இவர் 30 ஆண்டுகளுக்குப் பணிபுரிந்துள்ளார். முதல் உலகப் போரின்போது, தன் ஓய்வு நேரத்தில் பிரித்தானியப் போர் அலுவலகத்துக்காக கணிக்கீட்டுப் பணியைச் செய்தார். இவர் 1918 இல் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்று பிரித்தானிய வான்படை அமைச்சகத்துக்காக பணிபுரிந்துள்ளார். இப்பணியில் வான்கல வடிவமைப்பும் கட்டுமானமும் அடங்கும்.[4] மேயர் தன் கோட்பாட்டு வானியல் (கணித வானியல்) படிப்பின் பகுதியாக வானியலில் தணித்த ஆர்வம் பூண்டிருந்தார். இவர் இப்பாட்த்தில் வெளியிடப்படாத பல ஆய்வுகளைச் செய்துள்ளார். இவர் 1916 இல் அரசு வானியல் கழகத்துக்கு முதல் பெண்மணியாகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடன் ஏ. கிரேசு குக், பியம்மேத்தா வில்சன், எல்லா சர்ச்சு, மேரி பிளேகு, இரீன் எலிசபெத் தோயி வார்னர் அகியோரும் அரசு வானியல் கழகத்துக்குத் தேர்வாகினர்.[4] பிற செயல்பாடுகள்மேயர் கேம்பிரிட்ஜ், கிர்ட்டன் கல்லூரி ஆலயத்துக்கான ஓக் மரப் பலகங்களைச் செதுக்கியதோடு, அப்பலகங்களைச் செதுக்கிய மாணவர்களையும் மேற்பார்வையிட்டுள்ளார்.[5] இவர் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் ஆல்பைன் மகளிர் மலையேற்றக் குழுமத்தில் உறுப்பினராகவும் பின்னர் அதன் தலைவராகவும் விளங்கியுள்ளார்.[6] இறப்புஇவர் 1924 இல் மிதிவண்டியில் சென்றபோது பேருது மோதி இறந்துள்ளார்.[1] இவர் தன் உயிலில் கிர்ட்டன் கல்லூரியின் பெண் கணிதவியல் மாணவருக்கு 2000 பவுண்டுகள் கொடையாக வழங்கியுள்ளார்.[7] இவர் மேலும் 1000 பவுண்டுகளை கல்லூரிக் கணிதவியல் நூல்களை வாங்கவும் தான் திரட்டிய கணிதவியல் நூல்களையும் தந்துள்ளார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia