அவரது ஆரம்ப காலத்தில், ஜான்சன் ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக இருந்தார். ஒன்பது வயதில், 20 ஓவர் போட்டியில், அவர் ஆட்டமிழக்காமல் 164 ஓட்டங்கள் எடுத்தார். அவரது தந்தை அந்தப் போட்டியைப் பார்த்து தனது மகனின் திறமையை அடையாளம் கண்டுகொண்டார். அவர் இரட்டைச் சகோதரர்களான மார்கோவுக்கும் துவானுக்கும் வலைப் பயிற்சி அளித்தார். [3] துவான் வடமேற்கு அணிக்காக விளையாடுகிறார். [4]
சர்வதேசப் போட்டிகள்
ஜனவரி 2021 இல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் ஜான்சன் சேர்க்கப்பட்டார். [5]
மே 2021 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் ஜான்சன் பெயரிடப்பட்டார். [6] டிசம்பர் 2021 இல், தென்னாபிரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக மீண்டும் அழைக்கப்பட்டார். [7] அவர் தனது தேர்வுத் துடுப்பாட்ட முதற்போட்டியை 26 டிசம்பர் 2021 அன்று இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். [8] அவரது முதல் தேர்வுத் துடுப்பாட்ட இலக்காக ஜஸ்பிரித் பும்ரா வியான் முல்டரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.[9]
ஜனவரி 2022 இல், தென்னாப்பிரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான தொடருக்காகத் தனது முதல் ஒருநாள் சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான அழைப்பைப் பெற்றார். [10] அவர் 19 ஜனவரி 2022 அன்று தென்னாப்பிரிக்காவுக்காக இந்தியாவுக்கு எதிராக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். [11] மே 2022 இல், தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு இருபது20 அணியில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜான்சன் இடம்பிடித்தார். [12] அவர் தனது முதலாவது பன்னாட்டு இருபது20 போட்டியை 17 ஜூன் 2022 அன்று இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். [13]