மாலைமாற்றுமாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொல் (Palindrome) என்பது பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப்போலவே பொருள் கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும்.[1] தமிழ் இலக்கியத்தில் ஓவியக் கவி, மிறைக் கவி ஆகிய பிரிவுகளுள் மாலைமாற்று அடங்கும்.[2] மாலைமாற்று என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Palindrome என்பது கிரேக்க வேர்ச் சொற்களிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.[3] வரலாறு![]() இது வரையில் கண்டறியப்பட்ட பழைய மாலைமாற்றானது கி. மு. 79ஐச் சேர்ந்த இலத்தீன் சொல்லான Sator Arepo Tenet Opera Rotas என்பதாகும்.[4] வகைகள்சொல்
ஆங்கிலத்தில் நீண்ட மாலை மாற்றுஆக்சுவோர்டு ஆங்கில அகரமுதலியில் மாலைமாற்றாகவுள்ள நீண்ட சொல் Tattarrattat என்பதாகும். தொடர்கள்
போன்ற தொடர்கள் மாலைமாற்றாக அமைந்துள்ளது.[5] ஆங்கிலத்தில்
போன்ற தொடர்கள் மாலைமாற்றுகள் ஆகும். பொதுவாக, மாலைமாற்றுத் தொடர்களில் வரும் இடைவெளிகள், நிறுத்தக்குறிகள், பேரெழுத்து-சிற்றெழுத்து வேறுபாடு போன்றவை கவனிக்கப்படுவதில்லை. பெயர்கள்ஆங்கிலத்தில் Anna, Hannah, Ada, Bob, Eve போன்ற பெயர்கள் மாலைமாற்றுகளாக அமைந்துள்ளன. பாடலில்சம்பந்தர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலைமாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன.[6] [7] கீழ்வரும் பாடல் அவற்றுள் ஒன்று.
பிறர்மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணம் ஆகிய தமிழ் இலக்கியங்களிலும் மாலைமாற்றுப் பாக்கள் உள்ளன.[8] எளிய பாடல்
திரைப்படப் பாடல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia