மாலை (சிற்றிலக்கியம்)

ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பல பாவகைகள் கொண்டு பாடுவதை மாலை என்ற சிற்றிலக்கியம் என்று என்கிறார்கள். 96 வகை சிற்றிலக்கிய வகைகளில் 28 வகை மாலைகள் உள்ளன.

மாலை வகைகள்

பின்பகுத்துள்ள 28 மாலை வகைகளில் புலவர்கள் சிற்றிலக்கியங்கள் படைத்துள்ளனர்:

  1. அங்கமாலை
  2. அனுராகமாலை
  3. இரட்டைமணிமாலை
  4. இணைமணி மாலை
  5. நவமணிமாலை
  6. நான்மணிமாலை
  7. நாமமாலை
  8. பல்சந்தமாலை
  9. கலம்பக மாலை
  10. மணிமாலை
  11. புகழ்ச்சி மாலை
  12. பெருமகிழ்ச்சிமாலை
  13. வருக்கமாலை
  14. மெய்க்கீர்த்திமாலை
  15. காப்புமாலை
  16. வேனில் மாலை
  17. வசந்தமாலை
  18. தாரகைமாலை
  19. உற்பவமாலை
  20. தானைமாலை
  21. மும்மணிமாலை
  22. தண்டகமாலை
  23. வீரவெட்சிமாலை
  24. காஞ்சி மாலை
  25. நொச்சி மாலை
  26. உழிஞை மாலை
  27. தும்பை மாலை
  28. வாகை மாலை
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya