மாவட்டத் திட்டக் குழுமாவட்டத் திட்டக்குழு (District Planning Committee (DPC) இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 243 ZD-இன் கீழ் இந்தியாவில் உள்ள மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டிய குழுவாகும்.[1] மாவட்டத் திட்டக் குழுவின் துணை தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் இருப்பர். இவருக்கு உதவிட உதவி திட்ட இயக்குநர்களும் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் இருப்பர்.மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் குடிநீர், வடிகால் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு, இம்மாவட்டத் திட்டக் குழு திட்டங்களை வகுத்து மாநில அரசிற்கு வழங்கும். இத்திட்டத்தை செயல்படுத்தும் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசும் ஒன்றாகும்.[2] ஒரு சில மாநிலங்கள் மாவட்டட் திட்டக் குழுவை அமைக்கவில்லை. மாவட்டத் திட்டக் குழுவின் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும். மாவட்டத் திட்டக் குழுவில் கீழ்கண்ட துணைக்குழுக்கள் செயல்படும். அவைகள்: 1 ஊரக வளர்ச்சி துணைக்குழு, 2 வேளாண்மை வளர்ச்சித் துணைக்குழு, 3 நகர வளர்ச்சி துணைக்குழு, 4 நீர்ப்பாசான வளர்ச்சி துணைக்குழு, 5 பட்டியல் சமூகத்தினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிந்ததோர் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான வளர்ச்சி துணைக்குழு, 6 வேலைவாய்ப்பு பெருக்குதல் மற்றும் கிடைப்பதற்கான துணை குழு, 7 பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துணைக்குழு, 8 கல்வி வள்ர்ச்சிக்கான துணைக்குழு, 9 குடிநீர் வழங்கல் குழு, 10 சாலை மற்றும் போக்குவரத்து துணைக் குழு, 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியை கண்காணிக்கும் குழு [3] இதனையும் காண்க
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia