மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
மாசுகோ அரசப் பல்கலைக்கழகம் (Lomonosov Moscow State University, உருசியம்: Московский государственный университет имени М. В. Ломоносова, உருசியாவில் உள்ள பழமையானதும், பெரியதுமான பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் லோமோனோசோவ் என்ற பெயரில் இயங்கியது. 1755 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நிறுவனரான மிகைல் இலமனோசொவ் என்பாரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும்இங்கு 4,000 ஆசிரியர்களும், 15,000 உதவிப் பணியாளர்களும் உள்ளனர். [சான்று தேவை]5,000 பேர் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்கின்றனர். 40,000 ற்கும் அதிகமான இளநிலைப் பட்டதாரிகளும், 7,000 முதுநிலைப் பட்டதாரிகளாகளும் கல்வி கற்கின்றனர்.. ஆண்டுதோறும், 2,000 வெளிநாட்டு ஆய்வாளர்களும், மாணவர்களும் இங்கு வந்து கற்கின்றனர். அமைவிடம்1953 ஆம் ஆண்டு முதலே, பல்கலைக்கழகத் துறைகள் சுபேரோ மலைப் பகுதியில் உள்ளன. இந்தப் பகுதி மாசுகோவின் தென்மேற்கில் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. முதன்மைக் கட்டிடம், மாசுகோவின் கிரெம்லின் மாளிகைக்கு, நகர எல்லைக்கும் நடுவில் உள்ளது. மனெசனயா சதுக்கத்தில் சில துறைகள் இயங்குகின்றன. உக்ரைன், கசக்குத்தான், உசுபெக்கிசுத்தான் நாடுகளிலும் சில வளாகங்கள் உள்ளன. இதனுடன் இணைக்கப்பட்டிருந்த மாசுகோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மாசுகோ பன்னாட்டுத் தொடர்புகள் நிறுவனம் ஆகியன பிரிந்து தனி நிறுவனங்கள் ஆயின. இப்பல்கலைக்கழகம் உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உருசியாவில் உள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. வளாகம்உலகின் உயரமான கட்டிடங்களில் இந்த பல்கலையின் முதன்மை வளாகமும் ஒன்று. மைய கோபுரம் ஒன்று உள்ளது. மொத்தமாக 33 கிலோமீட்டர்கள் பரப்பளவில், 5,000 அறைகளைக் கொண்டுள்ளது. தரவரிசைப் பட்டியல்களில், உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இசையரங்கு, திரையரங்கு, நூலகம், நீச்சல் குளம், காவல் நிலையம், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பல வசதிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ளன. கணிதத் துறை, புவியியல் துறை, கவின்கலை துறை ஆகியன முதன்மைக் கட்டிடத்தில் இயங்குகின்றன. மொகோவாயா தெருவில் இருந்த பழைய கட்டிடத்தில், ஊடகத்துறை, ஆசியவியல் துறை, உளவியல் துறை ஆகியன இயங்குகின்றன. இங்குள்ள நூலகம், உருசியாவிலேயே மிகப் பெரியது. ஏறத்தாழ ஒன்பது கோடி நூல்கள் உள்ளன. ஆண்டுக்கு ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இதைப் பயன்படுத்துகின்றனர். வரலாறு![]() ![]() இப்பல்கலைக்கழகம், முதன்முதலில், அரச வரலாற்று அருங்காட்சியகத்தில் இயங்கியது. பின்னர், கேத்தரின் என்பவரால் மோகோவயா தெருவிற்கு மாற்றப்பட்டது. முதன்மைக் கட்டிடம் 1782 - 1793 ஆண்டுகளில் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில், மெய்யியல், மருத்துவம், சட்டம் ஆகிய மூன்று துறைகளே இயங்கிவந்தன. அப்போது உடற்பயிற்சியகமும் இருந்தது. பல்கலைக்கழகத்தின் அச்சுக்கூடத்தில், பிரபலமான இதழ் அச்சடிக்கப்பட்டது. ![]() 1804 ஆம் ஆண்டில், மருத்துவத் துறை பிரிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை, மகப்பேறு, எளிய மருத்துவம் என்றாகியது. 1884–1897, காலத்தில், அதிக நிதி உதவியாலும், அரசின் ஆலோசனையின்பேரில், 1.6 கிலோமீட்டர் நீளத்திற்கு பெரிய வளாகம் கட்டப்பட்டது. 1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு, ஏழை மக்களின் குழந்தைகளும் பட்டப்படிப்புக்கு சேர்க்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது, ஆய்வு நிபுணர்கள், வெடுகுண்டுகள், வானூர்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவினர். பல்கலைக்கழக ஆர்வலர்கள் சிலர், மாசுகோ நகரைப் பாதுகாக்கப் போராடினர். போரில், எதிரிப் படைகள் தலைநகரிலேயே தோற்கடிக்கப்பட்டன. போர் முடிந்ததும், நாட்டின் மீள்வளர்ச்சிக்கு இதன் பங்களிப்பு பெரிதும் உதவியது. அரசு அதிக நிதி ஒதுக்கியதால், புதிய வளாகம் கட்டப்பட்டது. இங்கு நவீன வசதிகளைக் கொண்ட ஆய்வுக் கூடங்களும், வகுப்பறைகளும் உள்ளன. 1991 ஆம் ஆண்டில், புதிதாக ஒன்பது துறைகள் சேர்க்கப்பட்டன. அரசின் நிதியுதவி, கல்வி அமைச்சகத்தின் தலையீடு இன்றி நேரடியாக பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு, பிரபல இசை நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வளாகம் பயன்படுத்தப்பட்டது. வெகுசிறப்பாக நடந்தேறியது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றனர். ![]() 2008 ஆம் ஆண்டு மார்ச்சு 19 ஆம் நாள், உருசியாவின் அதிநவீன கணினியான சுகிஃப் எமெசியூ, இங்கே கண்டுபிடிக்கப்பட்டது. உருசியப் பகுதிகளிலேயே அதிக வேகத்தில் இயங்கக் கூடியது [2][3][4] இதுவே. 2005 ஆம் ஆண்டு, இதன் 250வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. துறைகள்இங்கு 39 துறைகளும், 15 ஆய்வு மையங்களும் உள்ளன.[5]
ஆய்வு மையங்கள்
குறிப்பிடத்தகுந்த முன்னாள் மாணவர்கள்இங்கு பயின்ற, பணியாற்றிய 11 பேர் நோபல் பரிசும் , ஐவர் ஃபீல்ட்ஸ் பதக்கமும் வென்றுள்ளனர். ஆன்டன் செக்கோவ் (எழுத்தாளர்), மிக்கைல் கொர்பசோவ் (அரசியல்வாதி), விளாதிமிர் ஆர்னோல்டு (இயற்பியலாளர்) ஆகியோர் இங்கு கல்வி கற்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia