மா. கல்யாணசுந்தரம்

மா. கல்யாணசுந்தரம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகளாகப் பூச்சியியல் துறையில் பணியாற்றி வருகிறார். பூச்சியியல் துறையில் 5 நூல்களும், 9 கையேடுகளும், 43 ஆராய்ச்சிக் கட்டுரைகளும், 35 பொதுக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். 4 பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும், 9 தேசிய அளவிலான கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் முனைவர் ம. சுவாமியப்பனுடன் இணைந்து எழுதிய “வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya