மிகை மேய்தல்மீண்டு வளர்வதற்கு நேரம் அளிக்கப்படாமல், தாவரங்கள் கால்நடைகளால் நீண்ட நேரங்களுக்கு மேயப்படும் போது, மிகை மேய்தலானது நடக்கிறது.[1] செறிநிலை வேளாண்மை கடைப்பிடிக்கப்படாத போதும் கால்நடைகளை ஒழுங்காக கட்டுப்படுத்தாத போதும் மிகை மேயப்படுகிறது. மிகை மேய்ச்சலால் முதன்மை உற்பத்தி குறையும். உயிரியற் பல்வகைமை பாதிக்கப்படும். பாலைவனமாதல் நிகழ்வதற்கும் மண்ணரிப்பு ஏற்படுவதற்கும் மிகை மேய்ச்சல் காரணியாகக் கருதப்படுகிறது.[2][3] மிகைமேய்ச்சல் தற்காப்புபேண்தகு விவசாயம் புல்தரை பராமரிப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் மேய்த்தல் அளவீடு உள்ளிட்டவையை அடிப்படையாகக் கொண்டது. இதைக் கடைப்பிடிப்பதின் மூலமும் நிலைகொள் வேளாண்மை பயிற்சிகளை மேற்கொள்வதும் மூலமும் மிகை மேய்ச்சலை தடுக்க முடியும். [4] மிகைமேய்ப்புக்கான அறிகுறிகள்ஒரு நிலம் அதிகமாக மேயப்படுகிறதா என்றறிய ஒரு சில அறிகுறிகள் உள்ளன. முக்கியமான அறிகுறி கால்நடைகளுக்கு உணவின்மை. தொடர்ச்சியான மேய்ச்சல் குட்டைப் புற்கள் வளர வழிவகுத்துவிடும். இவை இரண்டு அல்லது மூன்று அங்குலங்கள் தானிருக்கும். மிகை மேய்ப்புக்கு உள்ளாகாத பகுதிகளில் ஒரு மீட்டருக்கும் உயரமான புற்களை பார்க்க முடியும். கால்நடைகளை மேய விடும் போது, ஓரு மேய்ச்சலுக்கும் அடுத்த மேய்ச்சலுக்கும் புற்கள் வளரும் வரை இடைவெளி விடவேண்டும். இதன்மூலம் மிகைமேய்ச்சலைத் தவிர்க்கலாம்.[5] சூழலியல் சீர்கேடுகள்மிகைமேய்ச்சல் மண்ணரிப்பை அதிகரிக்கும். மண்வளத்தையும் கணிசமாக குறைக்கும். கால்நடைகள் நடத்தல் மண்ணின் இறுக்கத்தை குறைத்து விடுவதால், நிலச்சரிவு நிகழ்வதற்கும் மிகை மேய்ச்சல் ஒரு காரணியாக அமைகிறது. தாவரங்களும் மிகை மேய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. [6] மேற்கோள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia