மிசோரி ஆறு
மிசோரி ஆறு, அல்லது மிசோரி ஆறு (Missouri River) வட அமெரிக்காவின் நீளமான ஆறாகும்.[10] இது மேற்கு மொன்ட்டானாவின் ராக்கி மலைத்தொடரில் உற்பத்தியாகி கிழக்காகவும் தெற்காகவும் 1,341 மைல் (3,757 கி.மீ.)[11] பயணித்து செயிண்ட் லூயிசு நகருக்கு வடக்கில் மிசிசிப்பி ஆற்றுடன் கலக்கிறது. இவ்வாற்றுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதி பத்து அமெரிக்க மாநிலங்களிலும் இரு கனடிய மாகாணங்களிலும் உள்ளது. கீழ் மிசிசிப்பி ஆற்றுடன் இணைத்து கணக்கிட்டால் இது உலகின் நான்காவது நீளமான ஆறாகும். 12,000 ஆண்டுகளாக மக்கள் மிசௌரியையும் அதன் துணையாறுகளையும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க முதற்குடிமக்கள் இதன் கரையோரங்களில் வசித்தார்கள், பெரும்பாலானவர்கள் நாடோடி வாழ்க்கை முறையைக் கடைபிடித்தனர். அவர்கள் அமெரிக்கக் காட்டெருதையே உணவுக்கு சாரந்திருந்தார்கள். இவ்வாற்றைப் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஐரோப்பியர்கள் கண்டறிந்தனர். இவ்வாற்று பகுதிகள் எசுப்பானியர்களிடமும் பிரெஞ்சுக்காரர்களிடமும் மாறி மாறி இருந்து, இறுதியில் லூசியானா வாங்கல் மூலம் அமெரிக்காவிடம் வந்தது. மிசோரி ஆறு அத்திலாந்திக்கு பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் வடமேற்குப் பெருவழி என்று கருதப்பட்டது. லூயிசும் கிளார்க்கும் முதன் முறையாக இவ்வாற்றின் நெடுக்க பயணப்பட்டு இது பெருவழி அல்ல என்று நிருபித்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கு நோக்கி விரிவடைந்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இவ்வாறே முதன்மையான வழியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விலங்குகளின் கம்பளி வணிகம் அதிகமானதைத் தொடர்ந்து கம்பளிக்காக விலங்குகளைப் பிடிப்பவர்கள் இவ்வாற்றுப் பகுதியை ஆராய்வதற்கான முதற்கட்டப் பணிகளை செய்ததுடன் காட்டுத் தடங்களையும் ஏற்படுத்தினர். 1830 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்ட வண்டி மூலம் இவ்வாற்றுப் பகுதிகளில் முதலில் ஐரோப்பியர்கள் குடியேறினர். நீராவிப் படகுகள் பின் குடியேற்றத்துக்கும் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்டன. ஆற்றங்கரைகளில் இருந்த அமெரிக்க முதற்குடிமக்களின் நிலத்தை ஐரோப்பியக் குடியேறிகள் பறித்துக்கொண்டதால் அமெரிக்க முதற்குடிமக்களும் குடியேறிகளுக்கும் இடையே கடுமையான நீண்டகாலப் போர் தொடங்கியது. அமெரிக்க வரலாற்றில் இப்போரே நெடிய போராகும். இருபதாம் நூற்றாண்டின் காலகட்டத்தில் இவ்வாற்றுப் படுகை வேளாண்மை வெள்ளக் கட்டுப்பாடு அணைகள் மூலம் நீர் மின்சாரம் என பெரும் வளர்ச்சி கண்டது. இந்த ஆறில் பதினைந்து அணைகளும் துணையாறுகளில் நூற்றுக்கணக்கான அணைகளும் கட்டப்பட்டுள்ளன. நீர்வழிப் பயணத்திற்காக வளைந்து நெழிந்து ஓடும் ஆறு பல மைல்களுக்கு நேராக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் ஆற்றின் நீளம் ஏறக்குறைய 200 மைல் (320 கி.மீ.) குறைந்தது. கீழ் மிசௌரி ஆற்றுப் பகுதி தற்போது மக்கள் தொகை மிகுந்ததாகவும் அதிக விவசாய உற்பத்தி கொண்டாதகவும் மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதியாகவும் விளங்குகிறது. அதீத வளர்ச்சியால் மீன்கள் எண்ணிக்கையுடன் காட்டுயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆற்று நீரின் தரத்தையும் அதீத வளர்ச்சி பாதித்துள்ளது. தோற்றமும் பயணமும்வயோமிங் மாண்டேனா மாநிலங்களில் தோன்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்திலிருந்து மிசோரி ஆறு துவங்குகிறது. பிரவுசர் இசுபிரிங் என்னுமிடத்தில் செப்பர்சன் முகட்டுக்கு தென்கிழக்கு சரிவில் தோன்றும் ஓடை மேற்காகவும் பின் வடக்காவும் பாய்ந்து ரெட் ராக் ஆறாக மாறுகிறது. வடகிழக்காக திரும்பி பீவர்கெட் ஆறாக என மாற்றம் பெற்று பின் இறுதியாக பிக் ஓல் ஆற்றுடன் இணைந்து செப்பர்சன் ஆறாக மாறுகிறது. மஞ்சப்பாறை தேசிய பூங்காவிலுள்ள மேடிசன் ஏரிக்கருகே பையர்கோல் ஆறு கிப்பான் ஆற்றுடன் இணைந்து மேடிசன் ஆறாகிறது. கல்லாடின் ஏரிக்கருகே தோன்றுவது கல்லாடின் ஆறு ஆகும். மிசௌரி தலைப்பகுதி மாநில பூங்கா அருகேயுள்ள இத்ரி போர்க் நகருகே செப்பர்சன் ஆறும் மேடிசன் ஆறும் இணைந்து மிசௌரி ஆற்றை அதிகாரபூர்வமாக தோற்றுவிக்கின்றன. அங்கிருந்து 1.6 மைல் தொலைவில் கல்லாடின் ஆறு இணைகிறது. மிசௌரி பின் பிக் பெல்ட் மலைத்தொடரின் மேற்கேயுள்ள கேன்யன் பெர்ரி ஏரியை கடந்து செல்கிறது. பின் வடகிழக்காக கிராட் பால்சு நகருக்கு அருகில் பாய்ந்து ஐந்து அருவிகளை உண்டாக்குகிறது. பின் கிழக்கு முகமாக திரும்பி இயற்கை அழகுமிக்க மிசௌரி இடைவெளி எனப்படும் பள்ளத்தாக்குகள் வழி ஓடி மேற்கிலிருந்து வரும் மரியாசு ஆற்றை இணைத்துக்கொண்டு போர்ட் பெக் ஏரியில் அகலமாகிறது. போர்ட் பெக் அணையை கடந்ததும் வடக்கிலிருந்து மில்க் ஆறு இதனுடன் இணைகிறது.[12][13] கிழக்கு மாண்டேனாவின் சமவெளியில் பாயும் மிசௌரி வடக்கு டகோட்டாவை அடையும் முன் பாப்புலர் ஆற்றை வடக்கிலிருந்து இணைத்துக்கொள்கிறது. வடக்கு டகோட்டாவை அடைந்ததும் மிசௌரின் முதன்மையான துணையாறான மஞ்சப்பாறை ஆறு தென்மேற்கிலிருந்து இணைகிறது. மிசௌரியுடன் கூடுமிடத்தில் மஞ்சப்பாறை ஆறே மிசௌரியை விட பெரிதாகும்.[n 1] மிசௌரிக்கு அதிக நீரை கொண்டுவரும் துணையாறும் இதுவே. சற்று தொலைவிலுள்ள வில்லிசுடனை கடந்து சககவியா ஏரியை கடந்ததும் காரிசன் அணையையை உருவாக்குகிறது. அவ்வணைக்கு கீழ் நைவ் ஆறு மேற்கிலிருந்து இணைந்து தெற்காக பாய்ந்து பிசுமார்க் நகரை அடைகிறது அங்கு ஆர்ட் ஆறு மிசௌரியுடன் மேற்கிலிருந்து இணைகிறது. வடக்கு தெற்கு டகோட்டா என இரு மாநிலங்களில் பரவியுள்ள ஓகே ஏரியில் மிசௌரி தேக்கமடைந்து ஓடிய சிறிது தொலைவில் கனான்பால் ஆறு அதனுடன் கூடுகிறது. தெற்காக ஒடும் இது பின் ஓகே அணையை தெற்கு டகோட்டாவில் அடைகிறது. தெற்கு டகோட்டாவில் கிராண்ட், மௌரிய, செயன்னே ஆறுகள் மேற்கிலிருந்து இதனுடன் இணைகின்றன.[12][13] மிசௌரி தென்கிழக்காக பெரும் சமவெளியில் பாய்ந்து வரும்போது நியோபரா ஆறும் பல சிறிய துணையாறுகளும் இதனுடன் இணைகின்றன.இது பின் தெற்கு டகோட்டாவுக்கும் நெப்ராசுக்கா மாநிலத்திற்கும் எல்லையாக அமைகிறது. அதன் பின் இதனுடன் இச்சேம்சு ஆறு வடக்கிலிருந்து கூடியதும் அயோவாவுக்கும் நெப்ராசுக்காவுக்கும் எல்லையாக இவ்வாறு அமைகிறது. சியோக்சு நகரை கடந்ததும் பெரும் சியோக்சு ஆறு வடக்கிலிருந்து கலக்கிறது. நெப்ராசுக்காவிலுள்ள ஒமாகா நகரை கடந்ததும் மிசௌரியின் பெரிய (நீளமான) துணையாரான பிளாட்டே ஆறு அதனுடன் மேற்கிலிருந்து இணைகிறது.[16] கீழ்புறத்தில் நெப்ராசுக்காவும் மிசௌரிக்கும் எல்லையான பின் கேன்சசுக்கும் மிசௌரிக்கும் நடுவே பாய்கிறது. மிசௌரியிலுள்ள கேன்சசு நகரத்துக்கு கிழக்கே கேன்சசு ஆறு இதனுடன் மேற்கிலிருந்து கலக்கிறது. அங்கிருந்து கிழக்காக பயணிக்கும் இவ்வாற்றுடன் வடக்கிலிருந்து கிராண்ட் ஆறு கலக்கிறது. இது செப்பர்சன் நகரத்தை அடைந்தவுடன் தென் பகுதியிலிருந்து ஓசேச் ஆறு கூடுகிறது, சற்று தொலைவில் காசுகோனேட் ஆறும் தெற்கிலிருந்து கூடுகிறது. பின் செயிண்ட் லூயிசு நகரக்கருகே மிசிசிப்பி ஆற்றுடன் மிசௌரி இல்லினாய் எல்லையில் இணைகிறது. [12][13] நீர்பிடிப்பு பகுதிஇதன் நீர்பிடிப்பு பகதியின் பரப்பு 529,350 சதுரமைல் ஆகும்.[7] இது கிட்டத்தட்ட அமெரிக்காவின் ஆறில் ஒரு பகுதியாகும்.[17] அல்லது வட அமெரிக்காவின் ஐந்து %இக்கு சற்று அதிகமாகும்.[18] இதன் நீர்பிடிப்பு பகுதி பெருமளவிலான அமெரிக்காவின் தடு பெரும் சமவெளியையும் வயோமிங் மான்ட்டாணா வாசிங்கடன் கொலராடோ ஐடகோ மாநிலங்ங்களின் ராக்கி மலைத்தொடரின் சிலபகுதிகளை மேற்கிலும் உள்ளடக்கியுள்ளது. இது மிசிசிப்பியுடன் கூடம் இடத்திற்கு மேலுள்ள மிசிசிப்பியின் நீர்பிடிப்பு பகுதியை விட இதன் நீர்பிடிப்பு பகுதி இருமடங்கு பெரியதாகும். [n 2] செயிண்ட் லூயிசில் மிசிசிப்பியுடன் கூடுமிடத்தில் இதன் பங்கு 45 விழுக்காடு ஆகும். வறட்சி காலத்தில் மிசிசிப்பியில் இதன் பங்கு 70 விழுக்காடு ஆகும்.[8][19] மிசௌரியின் நீர்பிடிப்பு பகுதியில் 1990 ஆண்டு 12 மில்லியன் மக்கள் வாழ்ந்தார்கள்.[7][20] நெப்ராசுக்காவின் முழு மக்கள் தொகையும், அமெரிக்க மாநிலங்களான மாண்ட்டாணா, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, வயோமிங், கொலராடோ, கான்சசு, மிசௌரி, அயோவா, ஐடகோ ஆகியவற்றின் பகுதி மக்களும் கனடா மாகாணங்களான அல்பர்ட்டா, ச்ச்காச்சுவான் ஆகியவற்றின் தென் கோடி பகுதி மக்களும் அடங்குவர்.[7] நீர்பிடிப்பு பகுதியின் பெரிய நகரம் டென்வர் ஆகும். 2005ஆம் ஆண்டு நான்கு மில்லியன் மக்களுடன் கூடிய பெருநகர டென்வரே மிசௌரியின் நீர்பிடிப்பு பகுதியிலிருந்த பெரிய பெருநகரமாக இருந்தது.[20][21] மற்ற பெரிய நகரங்களான ஒமாகா, கான்சசு நகரம், செயிண்ட் லூயிசு ஆகியவை மிசௌரியின் கீழ் புறத்திலேயே இருந்தன. இதற்கு மாறாக ஆற்றின் மேற்புறப்பகுதியில் மக்கள் தொகை குறைவாகவே இருந்தது.எனினும் பில்லிங்சு (மாண்ட்டாணா) போன்ற நகரங்கள் வேகமாக வளருகின்றன.[13][20] 170,000 சதுர மைலுக்கு சற்று அதிகமான விவசாய நிலங்களை மிசௌரி ஆற்று நீர்பிடிப்பு பகுதி கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் விவசாய நிலங்களில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதிலிருந்தே நாட்டின் மூன்றில் ஒரு பங்கு கோதுமை, பார்லி, ஓட்சு போன்றவை கிடைக்கின்றன.170,000 சதுர மைலில் 11,000 சதுர மைல் விவசாய நிலங்களே பாசன வசதி உடையதாகும். 281,000 சதுரமைல் நிலங்கள் கால்நடைகளை வளர்ப்பதற்காக பயன்படுகின்றன. 43,700 சதுர மைலுக்கு காடுகள் உள்ளன. 13,000 சதுர மைலுக்கு குறைவாக நகர்ப்புற பகுதிகள் உள்ளன. பெரும்பாலான நகர்ப்புற பகுதிகள் ஆற்றின் கரைகளிலேயே உள்ளன..[20][22] கடும் உயர வேறுபாடு உடைய மிசௌரியின் நீர்பிடிப்பு பகுதியானது மிசோரி ஆறு மிசிசிப்பியுடன் கலக்குமிடத்தில் கடல் மட்டத்திலிருந்து 400 அடியிலும் கொலராடோவின் லிங்கன் மலைத்தொடரில் 14,293 அடி உயரத்திலும் உள்ளது.[1][23][24] மாண்ட்டாணாவின் பிரவுசர் இசுபிரங் (மஞ்சப்பாறை பூங்காவுக்கு அண்மையில் உள்ளது) என்ற இடத்திலிருந்து 8,626 அடி உயரம் கீழிறங்கி வருகிறது. சமவெளியில் இதன் உயரவேறுபாடு ஒரு மைலுக்கு 10 அடியாகும். கிழக்கு பகுதியிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் இதன் உயரம் 500அடிக்கும் குறைவாகும், மேற்கில் ராக்கி மலைத்தொடரில் இதன் உயரம் 3000 அடிக்கும் அதிகமாகும்.[13] வடிகால் பரப்பு வேறுபாடான காலநிலையையும் மழைப்பொழிவையும் கொண்டுள்ளது. பொதுவாக கோடைகாலம் மித வெப்பத்துடன் ஈரப்பதமாக இருக்கும், குளிர்காலம் கடும் குளிருடன் இருக்கும். பெரும்பாலான நீர்பிடிப்பு பகுதிகளில் மழையளவு ஆண்டுக்கு 10 அங்குலம் இருக்கும், எனினும் மேற்குகோடியில் ராக்கியில் மழைப்பொழிவு ஆண்டுக்கு 40 அங்குலம் இருக்கும்,[20] அங்கு பெருமளவிலான மழைப்பொழிவு குளிர்காலத்திலேயே இருக்கும். கொலராடோ, வயோமிங், மாண்ட்டாணாவில் குளிர்கால வெப்பநிலை -60 பாரன்ஃகைட் டிகிரியாவும் கோடை காலத்தில் கான்சசில் 120 பாரன்ஃகைட் டிகிரியாகவும் சில சமயமிருக்கும்.[20] மிசோரி ஆறு வட அமெரிக்காவின் குறிபிடத்தக்க ஆறுகளில் ஒன்றாகும்.[25] இதன் நீர்பிடிப்பு பகுதி அமெரிக்கா கனடாவின் மற்ற ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ளது. துணையாறுகள்நூற்றுக்கணக்கான துணையாறுகளை கொண்டுள்ள மிசௌரியில் 95 குறிப்பிடத்தக்கவையாகும். பெரிய ஆறுகள் பல சமவெளியிலேயே மிசிசிப்பியுடன் கலப்பதற்கு முன் இதனுடன் இணைகின்றன.[26] பெரும்பாலான ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்தாலும் கிராண்டு, பெரும் சியோக்சு , இச்சேம்சு போன்றவை வடக்கிலிருந்து தெற்காக வருகின்றன.[20] மிசௌரியில் அதிக நீரை வெளியேற்றுவது மஞ்சப்பாறை ஆகும். பிளாட்டே இதன் நீளமான துணையாறாகும். கான்சசு, ஒசேச் ஆகியவை மற்ற முதன்மையான துணையாறுகள்.[27][28] பிளாட்டே வெளியேற்றும் நீரின் அளவை விட மஞ்சப்பாறை இரு மடங்கு நீரை வெளியேற்றுகிறது. இது மிசௌரியின் நீரில் 13 விழுக்காடு ஆகும்.[29][30] மாண்ட்டாணாவிலுள்ள 261 அடி நீளமுள்ள ரோ ஆறு உலகின் சிறிய ஆறும் இதன் துணையாறாகும்.[31][32] நீர் வெளியேற்றம்நீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் மிசௌரி ஆறானது அமெரிக்கவின் ஒன்பதாவது பெரிய ஆறாகும்.[சான்று தேவை] மிசௌரி பொதுவாக வறண்ட நிலங்களிலேயே வடிகிறது, மற்ற பெரிய அமெரிக்க ஆறுகளை ஒப்பிடும் போது இதன் நீர் வெளியேற்றமும் குறைவு. இதன் குறுக்கே அணைகள் கட்டப்படுவதற்கு முன்பு ஆண்டுக்கு இரு முறை வெள்ளம் வரும் ஒன்றை இளவேனில் கால வெள்ளம் என்றும் மற்றதை கோடை வெள்ளம் என்றும் அழைப்பார்கள். இளவேனில் கால வெள்ளம் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள பனி உருகுவதாலும், கோடை கால வெள்ளம் சமவெளிகளில் உள்ள பனி உருகுவதாலும் ராக்கி மலைத்தொடரில் ஏற்படும் மழையினாலும் ஏற்படுகிறது. கோடை வெள்ளமே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது, அச்சமயத்தில் சில ஆண்டுகள் நீர் வெளியேற்றம் சாதாரண சமயத்தில் இருப்பதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும்.[33][34] மிசௌரியின் நீர்வெளியேற்றம் அதன் குறுக்கே 174 கன கிலோமீட்டர் அளவுக்கு கட்டப்பட்டுள்ள 17,000 நீர்தேக்கங்களால் பாதிக்கப்படுகிறது இந்த நீர் தேக்கங்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த நீர்தேக்கங்களால் ஆண்டுக்கு 3.7 கன கிலோமீட்டர் அளவுக்கு நீர் ஆவியாகிறது. அமெரிக்க நிலப்பொதியியல் அளவீடு துறை 51 நீர் அளவு மானிகளை மிசோரி ஆறு நெடுக வைத்துள்ளது. பிசுமார்க் (வடக்கு டொக்கோட்டா) நகரத்தில் இதன் நீர் வெளியேறும் அளவு வினாடிக்கு 21,920 கன அடியாகும். அப்பகுதியில் வடிகால் பரப்பு 186,400 சதுர மைல்களாகும். இது மிசௌரியின் வடிகால் பரப்பில் 35% ஆகும். [35] கான்சசு நகரத்தில் இதன் நீர் வெளியேறும் அளவு வினாடிக்கு 55,400 கன அடியாகும். மிசௌரியின் மொத்த வடிகால் பரப்பில் 91% இந்நீருக்கு காரணமாகும்.[36] எருமனில் (மிசௌரி) சராசரியாக வினாடிக்கு 87,520 கன அடி நீர் 1897 முதல் 2010 வரை வெளியேறியது. ஆண்டுக்கு அதிகளவாக 1993இல் சராசரியாக வினாடிக்கு 181,800 கன அடி நீர் வெளியேறியது. 2006இல் வினாடிக்கு 41,690 கன அடி நீர் வெளியேறியதே குறைவான நீர்வெளியேற்றமாகும். 1993இலேயே வரலாற்றில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஆற்றில் பனிக்கட்டிகள் அணை போல் இருந்து நீர் வெளியேற்றத்தை தடுத்ததால் 1963 டிசம்பர் 23 இல் வினாடிக்கு 602 கன அடி நீரே வெளியேறியது. நிலவியல்![]() 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட ராக்கி உருவ்வான லாராமைடு ஒராச்செனி காலகட்டத்திலேயே மிசௌரி மாண்டானாவின் தென்மேற்கில் ராக்கி மலைத்தொடரில் தொடங்கியது. லாராமைடு காலகட்டத்துக்கும் சற்று முந்திய காலகட்டத்திலேயே (மெசசோயிக் காலகட்டத்து இறுதி, கிரிடேயசு காலகட்டத்தின் தொடக்கம்) மலைகள் உருவாக்கம் இப்பகுதியில் நிகழ்ந்தது.[37] ஒராச்செனி காலகட்டத்தில் அதற்கு முந்தைய கிரிடேசுயசு காலகட்டத்தில் உருவான பாறைகள் நிலவடுக்கு மோதலாலால் சற்று தூக்கப்பட்டன. இந்த நிலவடுக்கு மோதல் காரணமாக அட்லாண்டிக் முத்ல் மெக்சிக்கோ வளைகுடா வரையான உயரம் குறைந்த கடல் தன் வண்டலை இப்போதுள்ள மிசௌரி ஆற்றின் வடிகால் பகுதியின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளது. [38][39][40] லாராமைடு ஒராச்செனி காலகட்டத்தில் ஏற்பட்ட நிலவடுக்கு மோதலால் வட அமெரிக்க கண்டத்தின் நிலப்பகுதியில் இருந்த கடல் உள்வாங்கி பெரிய ஆறுகள் ராக்கியில் இருந்தும் அப்பலாச்சியனில் இருத்தும் தற்கால மிசிசிப்பி ஆற்றுடன் கலக்கப்பதற்கு வழி ஏற்படுத்தியது.[41][42][43] லாராமைடு ஒராச்செனி காலம் மிசௌரி ஆற்று நீரியியலுக்கு மிகவும் இன்றியமையாதது. இக்காலகட்டத்தாலயே ராக்கியில் இருந்த பனி உருகி பல ஆறுகள் வழியாக மிசௌரியில் கலக்கிறது [44] ![]() ![]() மிசௌரியும் அதன் பல துணையாறுகளும் அமெரிக்க பெரும் சமவெளியில் உள்ள 174,000 சதுர மைல் பரப்பிலுள்ள ஒகுலாலா நீர்கொள் படுகையையும் கிட்டத்தட்ட 30 -40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான படிம பாறைகளையும் தாண்டி பாய்கின்றன.[45][46] ஆற்றுகற்களும் மணற் துகள்களும் ஆற்றின் கரையோரங்களில் படிந்ததால் ஆற்றுத்தடங்கள் உருவானது. தென் டகோடாவிலுள்ள அரிகரி படிவுகள் 20-29 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது.[45] அரிகரி படிமத்துக்கு மேல் 3-5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நீர்கொள் படிமம் ராக்கி மலைத்தொடர் அரிக்கப்பட்டு நிலப்பரப்பில் பெரும் மாற்றம் நடைபெற்ற நிகழ்வால் ஏற்பட்டது.[45][47] அப்போது ராக்கியில் ஏற்பட்ட மாற்றத்தால் ராக்கி அயோவா எல்லை வரை நீண்டது. அந்நிகழ்வாலயே அமெரிக்க பெரும் சமவெளி கிழக்கு முகமாக சரிந்துள்ளதுடன் பெரும் நீர்கொள் படிகையை பெற்றுள்ளது. [48] கடைசியாக ஏற்பட்ட பனி ஊழிக்கு முன் மிசோரி ஆறு மூன்று பாகங்களாக பிரிந்திருந்தது. மேல் பகுதி\பாகம் வடக்கு நோக்கி பயணித்து அட்சன் குடாவில் கலந்தது.[49][50] நடு பகுதியும் கீழ் பகுதியும் கிழக்கு முகமாக பாய்ந்தன.[51] உலகம் பனி ஊழியால் முழுவதும் சூழப்பட்டிருந்த போது 15,000 ஆண்டுகளுக்கு முன் தென்கிழக்காக பாய்ந்து மிசிசிப்பி ஆற்றுடன் கலந்தது. அக்காலத்திலேயே மூன்று பாகங்களாக அல்லாமல் இது ஒரே ஆறாக மாறியது.[52] மேற்கு மாண்டானாவில் முன்பு மிசௌரி வடக்கு நோக்கி பாய்ந்து பியர் பா மலைத்தொடருக்கு அருகில் கிழக்கு நோக்கி திரும்பியதாக கருதுகிறார்கள். நீலக்கல் மேற்கு மாண்டானாவில் சில இடங்களில் மிசௌரியின் கரைகளில் கிடைக்கிறது.[53][54] கண்டங்களின் பனிப்பாளங்களால் மிசௌரியும் அதன் துணையாறுகளும் திருப்பி விடப்பட்டன, அது பல பெரிய ஏரித்தொகுப்புகளை உருவாக்கியது. ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்த போது ஏரிகளின் வளிம்பில் உள்ள நீர் கசிந்து அது ஓடைகளாக மாறியது.பயன்பாட்டில் இல்லாத அவைகளின் நீளம் கிட்டதட்ட 100 மைல்களாகும். பனிப்பாறைகள் சுருங்கிய போது மிசௌரியானது பியர்பாவின் தெற்கு பக்கமாகவும் மில்கி ஆற்றின் கீழ் புறுதமாகவும் ஓடத்தொடங்கியது.[55] மிசௌரிக்கு பெரும் சேறு என்ற பட்டப்பெயர் உண்டு. நிறைய வண்டலை மிசௌரி கொண்டுள்ளதால் இப்பெயர். வட அமெரிக்க ஆறுகளில் அதிக வண்டலை கொண்டுள்ளதில் மிசௌரியும் அடக்கம்.[2][56] பல முன்னேற்றங்கள் மிசௌரியில் ஏற்படும் முன்பு ஆண்டுக்கு 175-350 மில்லியன் டன் வண்டலை கழிமுகத்துக்கு கொண்டு வரும்.[57] அணைகளும் கால்வாய்களும் கட்டப்பட்டதால் இதில் சேரும் வண்டலின் அளவு 20-25 மில்லியன் டன்னாக குறைந்து விட்டது.[58] பெரும்பாலான வண்டல் அமெரிக்க பெரும் சம்வெளியிலிருந்தே வருகிறது. மிசௌரி தன் போக்கை மாற்றும் போது ஆற்றின் கரைகளில் உள்ள டன் கணக்கான மண்ணும் பாறைகளும் அரிக்கப்பட்டு வண்டலாகிறது. அணைகளும் கால்வாய்களும் கட்டப்பட்டு ஆறு தன் போக்கை மாற்றுவது தடைபட்டு அதிகளவு வண்டல் ஆற்றில் சேருவது குறைந்துள்ளது, அப்படியிருந்தும் மெக்சிக்கோ வளைகுடாவில் சேரும் வண்டலில் பாதி மிசௌரி உடையதாகும். மிசிசிப்பியின் கழிமுகப்படுகை மிசௌரின் வண்டலை பெருமளவு கொண்டே உருவாகியுள்ளது.[58][59] முதல் குடியேற்றம்தொல்பொருள் ஆய்வுத்துறையின் கணக்குப்பட்டி 10,000 – 12,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக மனிதன் மிசௌரி படுகைக்கு வந்துள்ளான்.[60] பனி ஊழிக்காலத்துக்கு பின்பு பெரிங் பாலத்தின் வழியாக அமெரிக்காவிற்கு ஆசியா கண்டத்திலிருந்து மனிதன் அதிக அளவில் குடிபெயர்ந்தான். பல நூற்றாண்டுகளாக மிசௌரி குடியேற்றத்துக்கு முதன்மை பாதையாக இருந்துள்ளது. பல குடியேற்ற குழுக்கள் மிசௌரியை தாண்டி ஒகையோ பள்ளத்தாக்கிலும் கீழ் மிசிசிப்பி பள்ளத்தாக்கிலும் குடியேறின. மலை உருவாக்குபவர் போன்ற பல குழுக்கள் மிசௌரியிலேயே தங்கிவிட்டன.[61] மிசௌரி கரையில் வாழ்ந்த அமெரிக்க தொல்குடிகளுக்கு தேவைக்கு அதிகளவிலேயே உணவும் குடிநீரும் கிடைத்தது. அமெரிக்க பெரு சமவெளியில் வ்வசை போகும் அமெரிக்க காட்டெருமைகள் உள்பட பல வித விலங்குகள் வசித்தன. அவைகளை வேட்டையாடுவதன் மூலம் உணவும் அவற்றின் தோல் ஆடைகளாகவும் தொல்குடிகளுக்கு பயன்பட்டன. இந்த விலங்குகள் பின்னாளில் ஐரோப்பிய காலனிவாதிகளால் கொன்றழிக்கப்பட்டன. ஆற்றுப்பகுதிகளில் மூலிகைகும் ஏராளமான மற்ற பயிர்களும் கிடைத்தன.[62] எழுதும் முறை அறியாததால் தொல்குடிகள் எதையும் எழுதிவைக்கவில்லை. ஐரோப்பியர்களே இப்பகுதியில் பல தொல்குடி இனக்குழுக்கள் இருந்ததாக எழுதி வைத்துள்ளார்கள்.[63] ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு மிசௌரி வணிகத்தும் போக்குவரத்துக்கும் பெருமளவில் பயன்பட்டு வந்ததுடன் பல்வேறு இனக்குழுக்களுக்கு எல்லையாகவும் இருந்தது. பல்வேறு இனக்குழுக்கள் கோடை காலத்தில் ஓரிடத்திலும் பனி காலத்தில் ஓரிடத்திலும் என்று மாறி மாறி கூடாரம் அமைத்து தங்கினார்கள். எப்படியிருந்த போதும் மிசௌரியே அவர்களின் வளத்துக்கு காரணமாக இருந்தது.[64] தொல்குடிகளின் மிசௌரியோரம் உள்ள சிற்றூர்கள் ஆரம்பகால பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய தோல் வணிகர்களின் சந்தையாக பயன்பட்டன.[65] காட்டுவாழ் ஐரோப்பியர்க்ளால் தொல்குடிகளுக்கு குதிரை அறிமுகமானதும் குதிரை பயன்பாடு தொல்குடிகளின் வாழ்க்கையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தியது. குதிரையால் அவர்களால் நெடுந்தொலைவு பயணப்பட முடிந்தது, வேட்டைக்கும் வணிகத்துக்கும் தொடர்புக்கும் பயன்பட்டது.[66] அமெரிக்க பெரும் சமவெளியிலும் ஒகையோ சமவெளியிலும் சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பைசன் எனப்படும் அமெரிக்க காட்டெருமைகள் பல மில்லியன் கணக்கில் மிசௌரி படுகைகளில் சுற்றித்திரிந்தன.[67] பெரும்பாலான அமெரிக்க தொல்குடிகள் பைசனையே உணவுக்கு பெரும் ஆதாரமாக கொண்டிருந்தார்கள் மேலும் பைசனின் கொம்பும் எழும்பும் வீட்டில் பல பயன்பாடுகளை கொண்டிருந்தது. தொல்குடிகள் மிசௌரியின் கரையோர புல்வெளிகளை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் எரிக்கும் நிகழ்வு பைசன்களுக்கும் உதவியது. ஐரோப்பியர்களின் வருகையால் அமெரிக்க தொல்குடிகளுடன் பைசன்களின் எண்ணிக்கையும் விரைவா குறைந்தது.[68] காலனி ஆட்களின் விளையாட்டுக்காக நடந்த பெரும் வேட்டையால் மிசிசிப்பிக்கு கிழபுறம் பைசன்கள் ஒன்று கூட இல்லாமல் 1833ஆம் ஆண்டுக்குள் அழிக்கப்பட்டன, மிசௌரி படுகையில் இருந்தவைகளும் பல நூறாக குறைக்கப்பட்டன. அமெரிக்க தொல்குடிகள் ஐரோப்பியர்களின் வருகையால் அம்மை போன்ற பல புதிய நோய்களுக்கு ஆளாயினர். புதிய நோய்களுக்கு எதிப்ப்பு சக்தி இல்லாத்தால் அவர்களில் பலர் இறந்தனர். உணவு ஆதாரம் அழிக்கப்படுவதாலும் புதிய நோய்கள் பரவுவதாலும் பெரும்பாலோஓர் வேறு இடங்களுக்கு குடிபெயர்தனர் பலர் துப்பாக்கி முனையில் வேறு இடங்களுக்கு போக கட்டாயப்படுத்தப்பட்டனர். .[69] ஐரோப்பியர் வருகை1673 மே மாதம் இரு பிரெஞ்சு நிலதேடல் அறிஞர்கள் ஏரி மிச்சிகனும் ஏரி ஊரோனும் சேரும் இடத்திலிருந்து விசுகான்சின் மிச்சிகன் ஆறு வழியாக பயணித்து பசிபிக் பெருங்கடலை அடைய நினைத்தார்கள். யூன் இறுதியில் மிசௌரியை கண்டு ஆவணப்படுத்தினார்கள். இவர்களின் ஆவணங்களின் படி அப்போ மிசௌரியில் வெள்ளம் என கணிக்கப்படுகிறது.[70] மிசௌரி முதன் முதல் ஆவணத்தில் குறிக்கப்பட்டது அப்போது தான். மிசௌரியை பெக்கிட்சுநோய் என்று உள்ளூர் மொழியில் குறித்ததாக கூறுகிறார்கள். மிசௌரி ஆற்றின் நுழைவாயிலில் அதிகநாட்கள் தங்காமல் பயணத்தை தொடர்ந்து மிசிசிப்பியுடன் ஆர்கன்சாசு ஆறு கலக்கும் இடத்துடன் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டார்கள். பின்னாளில் மிசிசிப்பி மெக்சிக்கோ வளைகுடாவில் கலக்கிறது தாங்கள் நினைத்தபடி பசிபிக்கில் அல்ல என அறிந்தார்கள்.[71] 1982ஆம் ஆண்டு பிரான்சு வட அமெரிக்க கண்டத்தில் மிசிசிப்பி ஆற்றுக்கு மேற்கு புற நிலப்பகுதியை தனக்கு உரிமையானது என்றது. கீழ் மிசௌரி நிலப்பகுதி இதற்குள் வரும். எனினும் மிசௌரியானது 1714ஆம் ஆண்டு வரை ஆராயப்படவில்லை. 1714இல் எட்டியாண்ட் டே வைன்யார்டும் சியோர் டே பார்குமாண்டும் மிசௌரி பகுதியில் தேடுதலை மேற்கொண்டனர். அவர்கள் மிசௌரியின் நுழைவாயிலில் இருந்து பிளாட்டே ஆறு வரை பயணப்பட்டனர்.அதற்கு மேல் எவ்வளவு தொலைவு பார்குமாண்டு பயணப்பட்டார் என தெளிவில்லை, வெளிர்பொன்நிற முடியுடைய மாண்டன் (தொல் குடி இனம்) என அவரது ஆவணங்களில் குறிக்கப்படுவதால் தற்கால வடக்கு டகோட்டாவிலுள்ள சிற்றூர்கள் வரை சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.[72] அந்த ஆண்டின் இறுதியில் பார்குமாண்டு மிசௌரி ஆற்றின் உச்சிக்கு செல்லும் வழி என்னும் நூலை எழுதினார். அதுவே மிசோரி ஆறு என்னும் பதத்தை முதலில் பயன்படுத்திய ஆவணம்\நூல் ஆகும். மிசௌரியின் துணையாறுகளுக்கு அதன் கரையில் வாழ்ந்த அமெரிக்க தொல் குடி இனத்தின் பெயரே வைக்கப்பட்டது. இந்த தேடல் குழு நிலபடமெடுக்கும் கில் என்பரை கண்டதால் அவரை பயன்படுத்தி கீழ்புற மிசௌரி முழுவதுதையும் வரைபடமாக்கியது.[73] 1723இல் பார்குமாண்டு போர்ட் ஓரிலியண்சை அமைத்தார், இதுவே ஐரோப்பியர்களால் மிசௌரி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட முதல் குடியேற்றமாகும். இது தற்கால பர்ன்சுவிக், மிசௌரிக்கு அருகில் இருந்தது. மிசௌரி நிலப்பகுதியை கைப்பற்ற ஆர்வமாக இருந்த எசுப்பானியர்களுக்கு எதிராக 1724இல் தொல்குடி இனக்குழு கமோச்சிகளின் ஆதரவை பார்மாண்டு த்லைமையிலான குழு பெற்றது. 1725இல் பார்மாண்டு மிசௌரி ஆற்றங்கரையின் பல இனக்குழு தலைவர்களை பிரான்சுக்கு அழைத்துச்சென்றார். அங்கு இவரின் பதவி உயர்த்தப்பட்டது. அவர் இனக்குழு தலைவர்கள் அமெரிக்கா வந்த போது அவர்களுடன் வரவில்லை. 1726இல் போர்ட் ஓரிலியண்சு தொல்குடிகளால் தாக்கி அழிக்கப்பட்டது அதனால் அது கைவிடப்பட்டது.[73][74] 1754இல் பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே பிரெஞ்சு இந்தியப் போர் மூண்டது. அமெரிக்க தொல்குடிகள் இருபுறத்திலும் இருந்து சண்டையிட்டாலும் அமெரிக்க போர் பெயர் விதிமுறைப்படி இவ்வாறு வைக்கப்பட்டது. 1763இல் பிரித்தானியர்களால் பிரான்சு தோற்கடிக்கப்பட்டு பாரிசு உடன்பாடு ஏற்பட்டது. இதன் படி பிரான்சு பிரித்தானியாவுக்கு தன் வசமிருந்த கனடா பகுதிகளையும் லூசியானாவை எசுப்பானியர்களுக்கும் அளித்தது.[75] எசுப்பானியர்கள் முதலில் மிசௌரியை முழுவதும் ஆராயவில்லை ஆதலால் உரிமம் பெற்றுக்கொண்டு மிசௌரியில் பிரெஞ்சு வணிகர்களை செயல்பட ஒப்புதல் அளித்தனர். 1790இல் பிரித்தானியாவின் அட்சன் வளைகுடா நிறுவனம் மேல் மிசௌரியில் அத்துமீறி செயல்படுவதை அறிந்ததும் பிரெஞ்சுக்காரர்கள் செயல்படுவதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தனர்.[76] 1795ல் எசுப்பானியர்கள் மிசௌரியை ஆராய ஒரு நிறுவனத்தை வாடகைக்கு அமைத்தார்கள். இச்சான் இவானுக்கும் இச்சேம்சு மாக்கேக்கும் சொந்தமான நிறுவனமே சிறந்த மிசௌரி தேடல் நிறுவனம் எனலாம்.[77] மிசௌரி தேடல் படலத்தை தொடங்கிய இவர்கள் தற்கால சியோக்சு நகரத்துக்கு அருகில் போர்ட் சார்ல்லலசை குளிர் கால கூடாரமாக 1795இல் அமைத்தார்கள். தொல்குடி இனமான மாண்டன்களின் சிற்றூர்களில் இருந்து பல பிரித்தானிய வணிகர்களை வெளியேற்றியவர்கள் மாண்டன்களின் பேச்சிலிருந்து மஞ்சப்பாறை ஆற்றின் இருப்பிடத்தை துல்லியமாக கணக்கிட்டார்கள். எனினும் அவர்களது குறிக்கோளான பசிபிக் பெருங்கடலை அடையவில்லை. அவர்களே மேல் மிசௌரியின் துல்லியமான வரைபடத்தை முதலில் உருவாக்கியவர்கள்.[78][79] 1795இல் மாண்டிட் உடன்பாட்டின் மூலம் மிசிசிப்பி ஆற்றில் படகு விடம் உரிமையையும் நியு ஓர்லியன்சில் ஏற்றுமதிக்காக கிடங்கு அமைக்கவும் அமெரிக்கா எசுப்பானியாவிட்டம் ஒப்புதல் பெற்றது.[80] எசுப்பானியா அந்த உடன்பாட்டை நீக்கிவிட்டு 1800இல் நெப்போலினின் பிரான்சுக்கு லூசியானாவை வேறொரு உடன்பாட்டின் படி அளித்தது. இந்த உடன்பாடு யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டிருந்தது. எசுப்பானியாவே லூசியானாவின் நிருவாகத்தை கவனித்து வந்தது. 1801இல் எசுப்பானியா மிசிசிப்பி ஆற்றில் படகு விடம் உரிமையையும் நியு ஓர்லியன்சிவ் கிடங்கு வைக்கும் உரிமையையும் மீண்டும் அமெரிக்காவுக்கு அளித்தது.[81] மீண்டும் நியூ ஓரியன்சு கைவிட்டு போய்விடும் என பயந்த அமெரிக்க அதிபர் தாமசு செப்பர்சன் 10 மில்லயன் டாலருக்கு நியூ ஓரிலியன்சை வாங்கிக்கொள்ள விரும்பம் தெரிவித்தார். கடன் நெருக்கடியில் இருந்ததால் நெப்போலியன் 15 மில்லியனுக்கு மிசௌரியுடன் முழு லூசியானாவையும் தருவதாக கூறினார். 1803இல் கையெழுத்தான இந்த உடன்பாடு மூலம் அமெரிக்காவின் பரப்பு இருமடங்காகியது.[82] 18003இல் தாமசு செப்பர்சன் லுயுசு என்ற நிலதேடலறிஞரை மிசௌரியை ஆராய்ந்து பசிபிக் பெருங்கடலுக்கு நீர் வழியை கண்டறியச் சொன்னார். இந்த சமயத்தில் பசிபிக் கடலில் கலக்கும் கொலம்பியா ஆறும் மிசௌரியும் ஒரே உயரத்திலேயே உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. அதனால் இவைகளுக்குள் தொடர்பு இருக்கும் என நம்பப்பட்டது.[83] எசுப்பானியா தான் லூசியானாவை பிரான்சுக்கு தரவில்லை என ம்றுத்தது. லுவிசு மிசௌரி தேடலை நடத்தக்கூடாதென்று கூறியதுடன் எவானதும் மேக்கேவினதும் வரைபடத்தையும் பார்ப்பதற்கு தடை விதித்தது. ஆனால் மேக்கிவினதும் எவானதும் வரைபடத்தை பல முயற்சிகளுக்கு பின் பார்த்தார்.[84][85] லியிசும் வில்லியம் கிளார்க்கும் 1804இல் மூன்று படகுகளில் தங்கள் மிசோரியின் உற்பத்தியாகும் இடத்தை காண புறப்பட்டனர்.[86] அவர்களே மிசௌரியின் முழு நீளத்திற்கும் பயணம் செய்த கொலம்பியா ஆற்றின் வழி பசிபிக்கடலை அடைந்த முதல் ஐரோப்பியர் ஆவர். எல்லோருதம் நம்பினது போல் பசிபிக் கடலை அடைய வடமேற்கு நீர்வழி பாதை இல்லை என்பதையும் கண்டறிந்து கூறினார்கள். பசிபிக் வடமேற்கு பகுதியின் வரைபடத்தை வெளியிட்டார்கள். இது பல நிலதேடல் அறிஞர்களுக்கும் குடியேறிகளுக்கும் உதவியாக இருந்தது. அமெரிக்காவின் எல்லை18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மென்மயிர்களையுடைய நீர்நாயையும் நீரெலியையும் கண்டறியும் நோக்கில் வடக்கு மிசௌரியின் வடிநிலத்தில் தோல் வியாபாரிகள் உள்நுழைந்தார்கள். இவைகளின் மென்மயிர் தோலினால் அவ்வகை தோல் வியாபாரம் வட அமெரிக்காவில் அதிகரித்தது. லுயிசு & வில்லியம் கிளார்க்கின் மிசௌரி பற்றிய தேடுதல் மூலம் இந்த பகுதி ஆயிரக்கணக்கான வேட்டை விலங்குகளை உடையது என முதலில் அறிந்தார்கள். அவர்களின் நூல் ஆயிரக்கணக்கான நீர்நாயும் நீரெலியும் அமெரிக்கக் காட்டெருதுகளையும் வடமேற்கு பசிபிக்கும் மேல் மிசௌரியும் கொண்டிருப்பதாக குறிப்பிட்டது. 1807இல் மானுவேல் லிசா என்பவர் ஒருங்கிணைத்த தோல் வியாபாரிகளால் மென் மயிர் தோல் வியாபாரம் மிகுந்த வளர்ச்சியை மேல் மிசௌரி பகுதியில் அடைந்தது.லிசாவும் அவரது குழுவும் மேல் மிசௌரி & மஞ்சப்பாறை பகுதியில் அமெரிக்க தொல்குடிகளிடம் பண்டமாற்று முறையில் மென் மயிர் தோல்களை பெற்றார்கள். தெற்கு மாண்டேனாவில் தோல் வணிகத்திற்காக மஞ்சப்பாறையும் அதன் துணையாறு பெரும்கொம்பும் சேருமிடத்தில் கோட்டை கட்டினார்கள்.[87][88] 1807இன் பிற்பகுதியில் கட்டப்பட்ட இக்கோட்டை போர்ட் ரேமண்டு என அழைக்கப்பட்டது. வடமேற்கு பசிபிக்கில் மிசௌரி போல் அல்லாமல் அட்சன் வளைகுடா போன்ற பெரும் வணிக நிறுவனங்கள் ஐரோப்பியர்களையே மென்தோலுக்காக விலங்குகளை வேட்டையாட வைத்தார்கள். மிசௌரியானது நெப்ராசுக்காவில் நுழையும் இடத்தில் போர்ட் லிசா கட்டப்பட்டது. செயிண்ட் லூயிசில் லிசா சிலருடன் இணைந்து மென்மயிர்தோல் நிறுவனத்தை ஆரம்பித்தார்.1824இல் அமெரிக்க மென்மயிர்தோல் நிறுவனம் போர்ட் யூனியன் என்பதை மிசௌரியும் மஞ்சப்பாறையும் கூடுமிடத்தில் அமைத்தது. போர்ட் யூனியனே பின் மென்மயிர்தோல் வணிகத்து்கு முதன்மையான இடமாகாக மேல் மிசௌரியில் திகழ்ந்தது.[89] 19ஆம் நூற்றாண்டில் ராக்கி மலைத்தொடரின் இரு புற சரிவிலும் மென்மயிர்தோல் எடுக்கப்பட்டது. மென்மயிர்தோல் எடுக்க மிசௌரியும் கொலராடோ கொலம்பியா ஆர்கன்சாசு போன்ற அதன் அண்டை பெரு ஆற்றுப்படுகைகளும் பயன்பட்டன. பெறப்பட்ட ஆயிரக்கான மென்மயிர்தோலை கொண்டு செல்ல கப்பல் தேவைப்பட்டது. இதுவே மிசௌரியில் ஆற்று போக்குவரத்து தொடங்க சிறப்பு காரணமாக அமைந்தது.[90] மென்மைக்காக துணிகளில் பட்டு சேர்ப்பது அதிகரித்ததால் 1830 வாக்கில் மென்மயிர்தோல் வணிகம் சரிவை சந்தித்தது. கட்டுப்பாடற்ற வேட்டையால் அச்சமயம் நீரெலிக்ளும் குறைந்து விட்டது.[91] மேலும் தொல்குடிகள் அடிக்கடி வணிக மையங்களை தாக்கியதும் மென்மயிர்தோல் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஆபத்தாக இருந்தது. சில இடங்ளில் 1840 வரை இத்தொழில் சிறப்பாக நடைபெற்றது. 1850இல் பெரும் சமவெளியில் இத்தொழில் முற்றாக அழிந்தது. இத்தொழில் பின்பு மிசிசிப்பி சமவெளிக்கும் நடு கனடாவுக்கும் நகர்ந்தன. செழிப்பாக இருந்த இத்தொழில் மிசௌரியில் அழிந்தாலும் இதன் சுவடுகளே பின்னாளில் மேற்கு அமெரிக்காவிற்கு திறப்பாக அமைந்தது. குடியேறிகள்19ஆம் நூற்றாண்டில் மிசௌரி அமெரிக்காவின் எல்லையாக இருந்தது. மிசௌரியின் கரைகளில் முதலில் போன்சு லிக் தடம் வழியாக அமெரிக்காவின் தென் பகுதியிலிருந்த அடிமை உரிமையாளர்கள் குடியேறினார்கள். அமெரிக்க மேற்கு பகுதிக்கு செல்லும் பெரும்பாலான தடங்கள் மிசௌரி கரையிலிருந்தே தொடங்கின. அமெரிக்க கிழக்கை மேற்குடன் இணைக்கும் போனி என்சுபிரசு என்ற அஞ்சலக சேவை புனித யோசப்பூ (மிசௌரி) என்ற ஊரின் வழியாக சென்றது. அதைப்போலவே ஒமாகாவுக்கும் ஓக்லேண்டுக்கும் இடையே ஓடும் கண்டம் கடக்கும் இருப்புப்பாதையின் ஒமாகாவிலுள்ள கிழக்கு முனையத்தை அயோவாவின் கவுண்சில் பிளப்மிரிருந்து மிசௌரியை படகு மூலம் கடந்து அடைந்தார்கள். கான்சசு நகரில் அனிபெல் பாலம் மிசௌரியின் குறுக்கே 1869இல் கட்டப்பட்டது. இதுவே மிசௌரியின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலமாகும். இந்த பாலமும் செயிண்ட் லூயிசுக்கு அடுத்து மிசௌரியின் பெரிய நகராக கான்ச்சு விளங்க ஒரு காரணமாகும். இண்ட்டிபென்டன்சு, மிசௌரி யில் இருந்து 500,000 மக்கள் சமயம், பொருளாதார நெருக்கடி, கலிபோர்னியாவில் அதிக தங்கம் கிடைத்தது போன்ற பல்வேறு காரணங்களால் கடின பயணமாக இருந்த போதிலும் அமெரிக்க மேற்கு நோக்கி 1830–60 காலகட்டத்தில் சென்றார்கள்.[92] பெரும்பாலானவர்கள் ஒமாகாவுக்கு சென்று பின் அங்கிருந்து வயோமிங், கொலராடோ மாநிலங்களிலுள்ள ராக்கி மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகி அங்கிருந்து அமெரிக்க பெரும் சமவெளியை அடையும் பிளாட்டே ஆறு வழியாக சென்றார்கள்.1850இல் பிளாட்டேவில் படகு போக்குவரத்து தொடங்கும் முன் மூடப்பட்ட வண்டியே போக்குவரத்துக்கு பயன்பட்டது.[93] 1860களில் கொலராடோ, வயோமிங், மாண்டேனா மாநிலங்களிலும் யூட்டா மாநிலத்தின் வடக்கிலும் தங்கம் கண்டறியப்பட்டது. அதனால் அப்பகுதிகளுக்கு நிறைய மக்கள் குடிபெயர்ந்தனர். நிலம் வழியாக சிறிது தங்கம் கொண்டுசெல்லப்பட்டாலும் பெரும்பாலானவை ஆறுகள் வழியாகவே கொண்டு செல்லப்பட்டன.[94] ஆறுகளின் மேல்பகுதியில் பொருட்களை கொண்டு செல்ல 150 நாட்கள் ஆனாலும் மாண்டேனாவிற்கு 80 சதவீத பொருட்கள் படகு மூலமே சென்றன. ஆபத்தான தொல்குடிகளின் குடியிருப்பு வழியே பொருட்கள் படகு மூலமே சென்றன. ஆபத்தான தொல்குடிகளின் குடியிருப்பு வழியே போயிசுமென் தடம் சென்றதால் மாண்டேனாவில் தங்கத்திற்காக குடிபெயர்பவர்களிடம் புகழடையாமல் பொலிவிழந்தது. அதற்கு மாற்றாக பெரும் உப்பேரி வழியாக மக்கள் சென்றனர்.[95] ![]() குடியேஇகள் அமெரிக்க பெரும் சமவெளியில் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றதால் அவர்கள் தொல்குடிகளுடன் நிலத்திற்காக மோதவேண்டியிருந்தது. இதனால் மோதலை தவிர்க்க அமெரிக்க அரசு பல சமவெளி தொல்குடிகளுடன் எல்லைகளை வரையறுப்பது போன்ற பல வகை உடன்பாடுகளை செய்து கொண்டது. பல உடன்பாடுகள் மீறப்பட்டு அமெரிக்க அரசுக்கும் தொல்குடிகளுக்கும் இடையே சிறிதும் பெரிதுமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட சண்டைகள் நிகழ்ந்தன.[96][97] போயிசுமென் தடத்தை டகோடா, மாண்டேனா, வயோமிங் பகுதிகளில் அமெரிக்கா தொடங்க தொல்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிவப்பு முகில் போர் தொடங்கியது. இதில் லகோடா தொல்குடிகளும் சயன் தொல்குடிகளும் இணைந்து அமெரிக்காவை எதிர்த்தார்கள். இப்போரில் தொல்குடிகள் வென்றனர். 1868இல் போர்ட் லாராமி உடன்பாட்டை அமெரிக்கா தொல்குடிகளுடன் ஏற்படுத்தியது, இத்ன் படி கருமலையும் பவுடர் ஆற்று கவுண்டியும் மிசௌரியின் வடபகுதிகளும் தொல்குடிகளுக்கு உரியது என்றும் அங்கு வெள்ளை குடியேறிகளின் தலையீடு இருக்காது என அமெரிக்கா உறுதியளித்தது. வடகிழக்கு கான்சசையும் மேற்கு மிசௌரி மாநிலத்தையும் மிசோரி ஆறு பிரிக்கிறது. மிசௌரி மாநிலத்திலிருந்து ஆற்றை கடந்து அடிமைகள் வைத்துள்ளோரின் ஆதரவு படைகள் கான்சசு நகரில் நுழைந்து கான்சசின் காயம் எனப்படும் தாக்குத்லையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினர். போன்வில் போர் 1861இல் ஐக்கிய அமெரிக்காவிற்கும் மிசௌரி மாநிலத்துக்கு இடையில் மிசௌரி ஆற்றுப்பகுதியில் நடந்தது. இதில் தொல்குடிகளுக்கு எத்தொடர்பும் இல்லையென்றாலும் அமெரிக்க உள் நாட்டுப்போரில் அமெரிக்கா ஆற்றின் போக்குவரத்தை கட்டுபடுத்தவும் மிசௌரி அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு பக்கம் சேருவதை தடுத்தது. அமெரிக்கர்களுக்கும் தொல்குடிகளுக்கும் இடையே அமைதி அதிக நாள் நீடிக்கவில்லை. மேற்கு தெற்கு டகோடாவிலும் கிழக்கு வயோமிங்கிலும் உள்ள கருமலையில் தங்கம் இருப்பதை அமெரிக்க சுரங்க தொழிலாளர்கள் கண்டறிந்தனர் அதனால் போர்ட் லாராமி உடன்பாட்டை மீறி தொல்குடிகளின் கருமலையில் நுழைந்தனர். அவர்களை தொல்குடிகள் தாக்கவே அவர்களை காக்க அமெரிக்கா படைகளை அனுப்பியது. இதனால் பெரும் சூ (சியாக்சு) போர் 1876–77 இல் நடைபெற்றது. போரின் போது நடந்த பெரும் சண்டைகளில் இரு தரப்பும் வெற்றியடைந்தாலும் இறுதியில் அமெரிக்க படையே போரில் வாகை சூடியது. கருமலையில் குடியேறிகள் நுழைய இருந்த தடை விலகியது. தொல்குடிகள் வேறு இடங்களுக்கு சென்றனர். அணைகள் கட்டுமான காலம்மிசௌரியின் 35% கொள்ளளவுள்ள நீரை தேக்கும் ஏராளமான அணைகள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மிசௌரியில் கட்டப்பட்டன.[7] நிறைய அணைகள் கட்டப்படுவதற்கு வடமேற்கு படுகையின் ஊரகத்தின் மின்தேவை அதிகரித்ததும், வெள்ளம் வறட்சியால் அதிகரித்த விவசாய வளர்ச்சி பாதிக்காமல் இருக்குவும் கீழ் மிசௌரி நகர்புறங்கள் வெள்ளத்தால் பாதிப்படையாமல் இருக்கவும் போன்ற பல காரணிகள காரணமாயின.[98] 1890 வரை பல மின்திட்டங்கள் தனியார் உரிமையுடையதாக இருந்தன. 1950 வரை நடு மிசௌரியில் பெரிய அணைகள் கட்டப்படவில்லை.[20][98] 1890இக்கும் 1940இக்கும் இடையே பேரருவி (நகரம்) இக்கு அண்மையில் மேற்கு மாண்டேனா வழியாக வரும் மிசௌரியில் 5 அணைகள் மின் உற்பத்திக்காக கட்டப்பட்டன. இதில் கருங்கழுகு அருவிக்கு கீழ் கருங்கழுகு அணை முதன் முதலாக 1891இல் கட்டப்பட்டது. இவ்வணை 1926இல் புணரமைக்கப்பட்டது.[99] ஐந்து அணைகளில் பெரியதான ரியான் அணை 1913இல் கட்டப்பட்டது.[100] அதே காலகட்டத்தில் பேரருவி (நகரம்)இக்கு எலனாவுக்கும் இடையே பல தனியார் நிறுவனங்கள் மின்உற்பத்தி செய்தன. கற்கள் நிரப்பப்பட்ட மரச்சட்டங்களால் ஆனா சிறிய அணை தற்போதுள்ள கேன்யன் பெர்ரி அணைக்கு அருகில் 1898இல் இரண்டாவதாக கட்டப்பட்டது. இவ்வணை 7.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது, அதனால் எலனாவும் அதன் சுற்றுப்புறங்களும் பயன்பெற்றன.[101] இரும்பு சட்டங்களால் ஆன அவுசர் அணை 1907இல் கட்டப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டே கட்டுமான சிக்கலால் இவ்வணை உடைந்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. கருங்கழுகு அணையின் ஒரு பகுதி பேரருவி நகரத்தின் ஆலைகளை வெள்ளத்திருந்து காக்க வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அவுசர் அணை1910இல் பெருஞ்சுதையால் மீண்டும் உறுதியாக கட்டப்பட்டது.[102][103] எலனாவுக்கு கீழ் சுமார் 45 மைல் தொலைவில் ஓல்டர் அணை 1918இல் கட்டப்பட்டது. மின்உற்பத்திக்கான மூன்றாவது அணை இதுவாகும்.1949இல் அமெரிக்கா வெள்ள கட்டுப்பாட்டுக்காக கேன்யான் பெர்ரி அணையை மேம்படுத்தி கட்டியது. 1954இல் புதிய அணையின் நீர்த்தேக்க்கத்தில் நீர் உயர்ந்ததால் புதிய அணையிலிருந்து 1 மைல் தொலைவிலுள்ள பழைய அணை மூழ்கியது. 1884, 1881, 1926–27 ஆகிய ஆண்டுகளில் மிசௌரி படுகை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.[104] 1940இல் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் காரணமாக அமெரிக்க இராணுவ பொறியாளர் அணி போர்ட் பெக் அணையை மாண்டேனாவில் கட்டியது. வெள்ள கட்டுப்பாட்டு்க்காக உருவான இவ்வணையால் 50,000 தொழிலாளர்களுக்கு இதனால் வேலை கிடைத்தது. எனினும் மிசௌரியின் 11 % நீரையே இவ்வணையால் கட்டுப்படுத்த முடிந்தது.[105] பனி உருகி ஏற்படும் வெள்ளத்தை இதனால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது மூன்று ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட வெள்ளத்தால் அறியமுடிந்தது. ஓமாகாவிலும் கான்சசு நகரிலும் இரண்டாம் உலகப்போருக்கு இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்த பல ஆலைகள் அந்த வெள்ளத்தில் மூழ்கின.[104][106] இவ்வெள்ளத்தால் மிசௌரி-மிசிசிப்பி ஆற்றுப்படுகை கடுமையாக பாதிக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்ற கீழவை வெள்ள தடுப்பு சட்டத்தை 1944இல் கொண்டு வர இது காரணமாக அமைந்தது. இந்த சட்டம் அமெரிக்க இராணவ பொறியாளர் அணி மிசௌரி படுகையை பரந்த அளவில் மேம்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தியது.[107][108] முற்றிலும் வேறு திட்டங்கள் உடைய சோலன் - பிக் மிசௌரி படுகை திட்டத்தை 1944 ஆண்டு உருவான சட்டம் நடைமுறைபடுத்த உதவியது. லுவிசு பிக்கின் திட்டமானது மிசௌரியில் பெரும் அணைகளை கட்டி அதன் மூலம் வெள்ளத்தடுப்பும் நீர்மின்சாரமும் பெறலாம் என்றது. வில்வியம சோலனின் திட்டம் அதிக அளவில் சிறு அணைகளை கட்டி விவசாய நிலங்களுக்கு தடையில்லா நீரை அளிப்பதன் மூலம் அப்பகுதியை மேம்படுத்தலாம் என்றது.[98][109] பிக்-சோலன் திட்டத்தின் தொடக்கத்தில் வடக்கு டகோட்டா ரிவர்டேலில் மிசௌரியில் ஓர் அணை கட்டுவதாகவும் யெல்லோ இசுடோனில் 27 சிறு அணைகள் கட்டுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.[110] மஞ்சப்பாறையின் படுகையிலிருந்தவர்களில் பலர் அங்கு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கு தீர்வாக மஞ்சப்பாறையில் கட்டப்படவிருந்த் அணைகளின் நீரை தேக்கும் அளவுக்கு ரிவர்டேலில் கட்டப்படும் காரிசன் அணையின் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. மஞ்சப்பாறையில் அணைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்ததாலயே இன்று அமெரிக்காவில் எந்த மனித குறுக்கீடும் இல்லாமல் நீண்ட தொலைவு பயணிப்பதாக மஞ்சப்பாறை உள்ளது.[111] 1950இல் மிசௌரியின் குறுக்கே ஐந்து அணைகளை கட்டும் வேலை தொடங்கியது. 1940இல் திறக்கப்பட்ட போர்ட் பெக் அணை பிக்-சோலன் திட்டத்தின் ஓர் அலகாக சேர்க்கப்பட்டது.[112] ரிவர்டேலில் கட்டப்பட்ட அணையால் தொல்குடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் ஆற்றையொட்டிய வண்டல் நிலமும் அடக்கம். வறண்ட நிலங்களை உடைய வடக்கு டகோட்டாவில் வண்டல் நிலங்கள் உணவுக்கு ஆதாரமாக அவர்களுக்கு இருந்தன. தொல்குடிகளின் 150,000 ஏக்கர் நிலங்கள் ரிவர்டேல் காரிசன் அணைக்காக எடுக்கப்பட்டது. இத்தை எதிர்த்து அமெரிக்க அரசுக்கு எதிராக மாண்டன், இடாடா, அரிகாரா தொல்குடிகள் 1851 போர்ட் லாராமி உடன்பாட்டை வைத்து வழக்கு தொடர்ந்தார்கள். நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் 1947இல் 5.1 மில்லியன் இழப்பீட்டுக்கு ஒத்துக்கொண்டார்கள். 1949இல் அத்தொகை 12.6 மில்லியனாக உயர்ந்தது. தொல்குடிகள் அணைப்பகுதியில் மீன்பிடிப்பது, அணைக்கருகில் வேட்டையாடுவது போன்ற எல்லாவித உரிமைகளையும் இழந்தார்கள்.[113][114] மிசௌரியில் கட்டப்பட்ட ஆறு அணைகளில் போர்ட் பெக், காரிசன், ஓகே ஆகிய மூன்று அணைகளும் கொள்ளவில் அமெரிக்காவில் மிகப்பெரியவை. கேவின்சு பாயிண்டு மிசௌரியில் கடைசியாக உள்ள அணையாகும்.[20][115][116] நீர்வழிமிசௌரியில் படகு போக்குவரத்து ஐரோப்பியர் வருகைக்கு முன்பே ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது. ஐரோப்பியர்கள் முதலில் சிறு மர படகுகளை பயன்படுத்தினர் பின் பெரிய படகுகளை பயன்படுத்தினர்.[117] மிசௌரியில் முதல் நீராவிக்கப்பல் இண்டிபென்டெண்சு செயிண்ட் லூயிசுக்கும் கீடசுவில் (மிசௌரி) இக்கும் இடையே 1819இல் ஓடத்தொடங்கியது. 1830இல் கான்சசு நகருக்கும் செயிண்ட் லூயிசுக்கும் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது. சில கப்பல்கள் கான்சசை தாண்டியும் சென்றன. வெசுடர்ன் இன்சினியர், யெல்லோஇசுடோன் போன்ற மிகச்சில நீராவிபடகுகள் கிழக்கு மாண்டேனா வரை சென்றன.[117][118] 19ஆம் நூற்றாண்டில் மாண்டேனா முதல் செயிண்ட் லூயிசு வரை மிசௌரியின் முழு நீளத்துக்கும் நீராவிபடகு, மரப்படகு போக்குவரத்து இருந்தது. அப்படகுகளின் வழியே மென்மயிர் தோல்கள் அனுப்பப்பட்டன.[119] மென்மயிர் தோல் வணிகம் அதிகளவில் நடந்தது மிசௌரி மாகினா என்ற படகு உருவாக்கப்பட காரணமாக இருந்தது. இது கரடுமுரடான மாண்டேனாவிலிருந்து செயிண்ட் லூயிசுக்கு மென்மயிர் தோல்களை கொண்டு வரும் செயிண்ட் லூயிசில் அப்படகு பிரிக்கப்பட்டு அதன் மரங்கள் விற்கப்படும்.[117] நிறைய மக்கள் அமெரிக்காவின் பிற பகுதிகளிலிருந்து மிசௌரி படுகைக்கு குடிபெயர்ந்ததால் படகு போக்குவரத்து 1850 களில் அதிகரித்தது. செயிண்ட் லூயிசிலிருந்து பலர் ஒமாகா வரை வந்து அங்கிருந்து படகு செல்ல கடினமான ஆழம் குறைந்த பிளாட்டோ ஆற்று பகுதி நிலம் வழி சென்றனர். 1858இல் 150 பெரிய நீராவிப்படகுகளும் பல சிறிய படகுகளும் பயனில் இருந்தன. பல படகுகள் மிசௌரி பயன்பாட்டுக்கு முன் ஒகையொ ஆற்றில் பயனில் இருந்தவை.[119] படகு போக்குவரத்து தொழில் சிறப்பாக நடந்தாலும் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது, மிசௌரி நிறைய வண்டலை கொண்டு கலங்கிய நீரை கொண்டிருந்ததால் படகில் இருந்தவர்களால் ஆற்றின் ஆழத்தை பார்க்க முடியாமல் கிட்டதட்ட 300 படகுகள் வண்டல் மேடுகளில் மோதி உடைந்தன. இத்தகைய ஆபத்துகளால் மிசௌரியில் ஓடும் படகுகளின் ஆயுள் குறைவாக இருந்தது.[120] கண்டம் கடக்கும் இருப்புப்பாதையும் வட பசிப்பிக் இருப்புப்பாதையும் வந்ததால் நீராவிப்படகுகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை மெதுவாக குறைந்தது. 1890 களில் நீராவிப்படகு போக்குவரத்து பயணிகள் இல்லாததால் நின்றுபோனது. வேளாண் பொருட்களையும் சுரங்க பொருட்களையும் குறைந்த செலவில் கொண்டு சென்றதால் 20ஆம் நூற்றாண்டில் படகு போக்குவரத்து மீண்டது.[121][122] இசூ நகரை கடந்த பின்20ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் படகு போக்குவரத்துக்காக மிசௌரியின் இயல்பான தடத்தில் 32% நேராக்கப்பட்டது. இதற்காக மிசௌரி தடுப்பணைகளும் லெவ்வி எனப்படும் கால்வாய்களும் பயன்படுத்தப்பட்டது.[7] 1912இல் அமெரிக்க இராணுவ பொறியாளர் அணிக்கு மிசௌரியின் நுழைவாயிலில் இருந்து கான்சசு வரை ஆற்றின் நீர் குறைந்தது 6 அடி ஆழத்துக்கு இருக்க வேண்டுமென ஆணையிடப்பட்டது. 1925இல் ஆற்றின் அகலத்தை 200அடி ஆக்கும் திட்டத்தை அமெரிக்க இராணுவ பொறியாளர் அணி மேற்கொண்டது, அதற்கடுத்த இரு ஆண்டுகளுக்கு பின் கான்சசில் இருந்து சிக்சூ நகர் வரை மிசௌரியை ஆழப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியது. இத்தகைய பல செயல்பாடுகளால் ஆற்றின் நீளம் 2,540 மைலில் இருந்து 2,341 மைல்லாக குறைந்தது.[6][123] அணைகளை மிசௌரியின் குறுக்கே கட்டி நீர்வழிக்கு உதவுவது என்பது இருபதாம் நூற்றாண்டின் நடுவில் வந்த பிக்-சோலன் திட்டம் ஆகும். பெரிய அணைகளால் மிசௌரியில் ஆண்டு முழுவதும் படகு செல்லும் அளவுக்கான நீரோட்டம் இருக்கும் படி பார்த்துக்கொள்ளப்பட்டது.[124] பனி உருகி வரும் நீரில் பெரும்பகுதி அவ்வணைகளில் சேமிக்கப்பட்டது. இவ்வணைகளால் வறட்சி தடுக்கப்பட்ட போதும் 1993, 2011 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. 1945இல் இராணுவ பொறியாளர் அணி மிசௌரி நீர்வழி & கரைகளை மேம்படுத்தும் திட்டத்தில் ஆற்றின் அகலத்தை நிரந்தரமாக 300 அடி ஆக்கவும் ஆழத்தை 9 அடி ஆக்கவும் திட்டமிட்டது. இன்றும் செயல்பாட்டில் உள்ள அத்திட்டத்தின் ஒரு பகுதியாக இசூ நகர் முதல் செயிண்ட் லூயிசு நகர்வரை உள்ள ஆறு பாறைகளால் ஆன அகழியால் நீரோட்டம் கட்டுபடுத்தப்படுகிறது. அகழிகள் வண்டல் சேருவதை தடுப்பதுடன் ஆற்றின் சீரற்ற ஓரங்களை (அகலம்) வெட்டியோ மூடியோ சீர்படுத்துகின்றன.[125] எனினும் வண்டல் சேருவதை தடுக்கும் அவர்களின் முயற்சி முற்றிலும் பயன் தரவில்லை, 2006இல் அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையின் பல படகுகள் வண்டலால் தரை த்ட்டின.[126] ![]() ![]() மிசௌரியில் ஆண்டுக்கு 15 மில்லியன் டன் பொருட்கள் சென்றதாக 1929 இல் மிசௌரி நீர்வழி ஆணையம் கூறியது. ஆனால் 1994 முதல் 2004 வரை ஆண்டுக்கு 683,000 டன் பொருட்களே சென்றன.[127] ஆனால் எடை கணக்கில் மிசௌரியிலேயே அமெரிக்க ஆறுகளின் படகு போக்குவரத்தில் 83% நடைபெறுகிறது.[127] நீர்வழிக்காக மிசௌரி இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மிசௌரியில் கடைசி நீர்மின் நிலையமுள்ள கேல்வின்சு பாயிண்ட் அணைக்கு மேல் உள்ளது மேல் மிசௌரி என்றும் [128] அதற்கு கீழ் உள்ளது கீழ் மிசௌரி என்றும் அழைக்கப்படுகிறது. கீழ் மிசௌரியில் நீர்மின் நிலைய அணைகள் இல்லை ஆனால் ஏராளமான தடுப்பு அணைகள் உள்ளன. அது 12 அடி ஆழமான 200 அடி அகலமுள்ள அகழியில் ஆற்றின் நீரை படகு போக்குவரத்திற்காக திருப்புகிறது. போக்குவரத்து குறைதல்1960இலிருந்தே மிசௌரியில் படகு போக்குவரத்து குறைந்து அதில் எடுத்துச்செல்லப்படும் பொருட்களின் எடையும் குறைந்து வந்தது. 1960இல் அமெரிக்க இராணுவ பொறியாளர் அணி 2000ஆம் ஆண்டில் 12 மில்லியன் டன் பொருட்கள் மிசௌரி படகு போக்குவரத்தில் செல்லும் என கணித்தது. ஆனால் அதற்கு மாறாக 1977இல் 3.3 மில்லியன் டன்னாக இருந்தது 2000இல் 1.3 மில்லியன் டன்னாக குறைந்தது.[129] குறிப்பாக வேளாண் பொருட்கள் கொண்டு செல்வது பெருமளவில் குறைந்தது. மிசௌரி மூலம் நீர்பாசனம் பெற்று செயலுக்கு வரக்கூடிய விவசாய நிலங்களில் மிகச்சிறிதறவே செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்ததும் ஒரு காரணமாகும்.[130] 2006இல் 200,000 டன் பொருட்களே மிசௌரியில் கையாளப்பட்டிருந்தன, அது மிசிசிப்பியில் ஒரு நாளில் கையாளப்படும் எடையாகும்.[130] இருப்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வறட்சியும் பெருகிவிட்ட இருப்புப்பாதை போன்ற போக்குவரத்து வசதிகளும் பொறியாளர் அணி மிசௌரியின் நீர்வழியை ஒழுங்காக பராமரிக்காததும் மிசௌரியின் படகு தொழில் நசிய காரணமாகின. நீர்வழியாக பொருட்களை கொண்டு சென்றால் போக்குவரத்து செலவு குறைவு என்பதாலும் இருப்பாதைகளில் அதிகளவில் பல பொருட்கள்செல்வதாலும் படகு தொழிலை மேம்படுத்த தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.[131][132] வறட்சி நீங்கிய பின் 2010இல் 334,000 டன் பொருட்கள் மிசௌரியில் கையாளப்பட்டன. இது 2000 இக்கு பின் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். ஆனால் 2011இல் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரும்பகுதி மூடப்பட்டது இதனால் அடுத்த ஆண்டு மேலும் படகு தொழில் வளரும் என்று எதிர்பார்க்கப் பட்ட நம்பிக்கை தகர்ந்தது.[133] சூழியல்ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பு கொண்ட மிசௌரி படுகையில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல வகையான தாவரங்களும் விலங்குகளும் வாழ்ந்துவருகின்றன. பல்லுயிர் பெருக்கம் கடுங்குளிர் நிலவும் மிசௌரி தொடங்கும் மான்டேனாவை விட அதிக ஈரப்பதமுடைய சமவெளியில் அதிகமாகும். 20ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து மிசௌரியின் கரையோரம் பஞ்சு மரம் முதலிய பல வகையான மரங்கள் அதிகம் உள்ளன. மிசௌரி நிறைய மீன் இனங்களை கொண்டிருக்காவிட்டாலும் 300 வகையான பறவையினங்களுக்கு ஆதாரமாக உள்ளது. மீன் இனங்கள் 150 இதில் உள்ளன. மிசௌரியின் கரை பல பாலூட்டிகளுக்கும் மீன் இனங்களுக்கும் துணையாய் உள்ளது. உலகளாவிய இயற்கைக்கான நிதியம் மிசௌரியை மூன்று சூழ்மண்டலங்களாக பிரித்துள்ளது. மேல்மிசௌரி சூழ் நிலைத் தொகுப்பு கேல்வின்சு பாயிண்டு அணைக்கு மேல் உள்ளது. அதற்கு கீழ் மிசௌரியின் நுழைவாயில் வரை உள்ளது கீழ்மிசௌரி சூழ் நிலைத் தொகுப்பு. கேன்சசு ஆறு கலக்கும் இடத்திலிருந்து நுழைவாயில் வரை உள்ள மிசௌரியின் தெற்கு பக்கம் நடு புல்வெளி சூழ் நிலைத் தொகுப்பு ஆகும். மூன்று சூழ் நிலைத் தொகுப்புகளில் நடு புல்வெளி சூழ் நிலைத் தொகுப்பிலேயே பலவிதமான பறவைகளும் விலங்குகளும் அதிகமுள்ளன. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படகு தொழிலும் தொழிற்சாலைகள் அதிகம் வந்ததாலும் மிசௌரியின் நீர் கடுமையாக மாசுபட்டது. மிசௌரி படுகையின் தாவரங்கள் விலங்குகளின் இயற்கை வாழிடங்கள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டன. விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் மழை போன்றவற்றால் மிசௌரியில் கலப்பதால் நைட்ரசன் முதலியவை தேவையான அளவைவிட மிக அதிகமாக கலந்து பெரும் கேடை விளைவிக்கின்றன. லெவி போன்ற கால்வாய்கள் ஆற்றின் ஓரம் கட்டப்படுவதாலும் தடுப்பு அணைகளும் அணைகளும் கட்டப்படுவதாலும் மிசௌரியின் இயற்கை ஓட்டம் தடைபடுகிறது. ஆற்றின் கடைமடை பகுதிகளில் வண்டல் சேருவது தடுக்கப்படுகிறது. வண்டல் சேருவது பெருமளவில் குறைந்ததால் சில பறவைகளும் மீன் இனங்களும் மறைந்துவிட்டன. பொழுதுபோக்குபல அணைகளையும் ஆறுகளையும் கொண்டுள்ள மிசௌரி படுகையில் பொழுதுபோக்கிற்காகவும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 1960இல் 10 மில்லியன் மணி நேரத்தை பொழுதுபோக்கிற்காக சுற்றுலாவாசிகள் பயன்படுத்தினர் அது 1990இல் 60 மில்லியன் மணி நேரங்களாக அதிகரித்தது.[130] 1965இல் இயற்றப்பட்ட நடுவண் அரசின் தேசிய நீர் பொழுதுபோக்கு திட்ட சட்டம் பொழுதுபோக்கு மையங்களில் பயணிகள் அதிகரிப்பிற்கு காரணமாகும். இச்சட்டமானது இராணுவ பொறியாளர் அணி படகு நிறுத்துமிடங்களை கட்டவும் நிர்வகிக்கவும் சொல்வதுடன் பொழுதுபோக்கு மையங்களில் கூடாரதிடல்களை அமைக்கவும் மேலும் பல வசதிகளை அங்கு ஏற்படுத்தவும் கூறுகிறது. [20] பொழுதுபோக்கு மையங்கள் மூலம் ஆண்டுக்கு 85 முதல் 100 மில்லியன் டாலர்கள் அப்பகுதிக்கு கிடைப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. .[134] 3,700 மைல் நீளமுடைய லிவிசு-கிளார்க்கு தேசிய வரலாற்று சிறப்புமிக்க தடம் 11 மாநிலங்கள் வழியாக செல்வதுடன் மிசௌரியின் நுழைவாயிலிருந்து அது உற்பத்தியாகும் இடம் வரை செல்லுகிறது. இத்தடம் மிசௌரியை மட்டுமல்லாது மிசிசிப்பி, கொலம்பியா ஆற்றின் சில பகுதிகளையும் தொட்டு செல்கிறது. 100 வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இதன் தடத்தில் உள்ளன.[135][136]. போர்ட் ராண்டால் முதல் காவின்சு பாயிண்ட் அணை வரையுள்ள 95 மைல் நீள மிசௌரி பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. [137][138] குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia