மிச்மி மலைகள்
மிச்மி மலைகள் (Mishmi Hills) இந்தியாவின் வடகிழக்கில், மத்திய அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளது[1]. இவைகள் சான்-மலேசியா தட்டின் ஒரு பகுதி ஆகும்[2]. இதன் பதிவு செய்யப்பட்ட உயரமானது 5140 அடி[3]. இம்மலைகள் இமயமலைத்தொடரின் தெற்கு நோக்கிய விரிவாக்கமாகவும் மற்றும் இதன் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் சீனாவையும் தொடுகிறது. இவை மூன்று புவியியல் பிரிவுகளாக உள்ளது. வடகிழக்கு இமயமலை மற்றும் அரக்கான் மலைகள் இணையும் இடத்தில் இம்மலைகள் இருக்கின்றன. இமயமலை கூர்மையான வில் போன்று வளைந்து இந்தியா-பர்மா மலைத்தொடர்களை சந்திக்கின்றன[4]. அறிமுகம்புவியியல் முறையில் மிச்மி மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பிரம்மபுத்திரா ஆற்றின் கிளைநதிகளால் உருவான வெள்ள சமவெளிகள் மற்றொன்று அருணாச்சல இமயமலை. பனிமூடிய மலைகள், கீழ் இமயமலைத் தொடர் மற்றும் சிவாலிக் மலைத் தொடர் ஆகியாவை அருணாச்சல இமயமலையில் அடங்கும். மிகவும் சரிவான நிலவமைப்பு மற்றும் அதிக மழைப்பொழிவு ஆகியவை இம்மலைப் பகுதியில் காணப்படுகின்றன. இம்மலைப்பகுதியின் பெரும் பகுதி திபாங் பள்ளத்தாக்கில் உள்ளன[5]. நிர்வாகம்1948-ஆம் ஆண்டில் மிச்மி மலைகள் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் 1951-ஆம் ஆண்டில் சமவெளி பகுதிகள் அசாமின் நிர்வாக சட்ட ஆட்சிக்கு மாற்றப்பட்டது.[6] தாவரங்கள் மற்றும் விலங்குகள்மிச்மி மலைகளில் பருவ மழைக்கு முன்பு மார்ச்சு மாதத்திலிருந்து அதிக மழைப் பொழிவு இருக்கும். ஈரப்பதம் மற்றும் மழைப் பொழிவு 90% ஆக இருக்கும். சுமார் 6000 தாவர இனங்களும், 100 பாலூட்டிகளும் மற்றும் சுமார் 700 பறவை இனங்களும்[7] இங்குள்ளன. இங்கு நிறைய பட்டாம்பூச்சிகளும் மற்றும் வேறு பூச்சிகளும் இருக்கின்றன. ஊசியிலைகள், பசும்புல் நிலம், மூங்கில்கள் மற்றும் புல்வெளிகள் இங்கு காணப்படுகின்றன. புலி, பொதுவான சிறுத்தைகள், பனி சிறுத்தைகள், காட்டுப் பூனைகள் மற்றும் சிறுத்தை பூனைகள் இங்கு காணப்படுகின்றன. அழிந்து கொண்டிருக்கும் இனமான சிகப்பு பாண்டாக்கள் இதன் வடக்கு எல்லையில் காணப்படுகின்றன. மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia