மினத்தோகவா மனிதன்மினத்தோகவா மனிதன் (Minatogawa Man) என்பது, சப்பானின் ஒக்கினாவாத் தீவில் வாழ்ந்த வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களில் ஒருவர். அங்கு வாழ்ந்த மக்களில் நால்வரின் எலும்புக்கூடுகளும், சில தனி எலும்புகளும் ஒக்கினாவாத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுளெலும்புக்கூடுகளில் இரண்டு ஆண்களுக்கும், இரண்டு பெண்களுக்கும் உரியவை. மேற்படி எலும்புக்கூடுகள் கிமு 16,000 முதல் 14,000 ஆண்டுகள் வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. சப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான ஒமினிட் எலும்புக்கூடுகளுள் இவைகளும் அடங்கும்.[1][2][3][4][5] கண்டுபிடிப்பின் வரலாறுநாகாவிலிருந்து 10 கிமீ தெற்கே, ஒக்கினாவாத் தீவின் தென் முனைக்கு அண்மையில் உள்ள மினத்தோகவா சுண்ணக்கல் அகழிடத்தில் மேற்படி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒக்கினாவா வணிகரும், தொழில்சாராத் தொல்லியலாளருமான செய்கோ ஒயாமா என்பவர் தான் மேற்சொன்ன அகழிடத்தில் வாங்கிய சில கற்களில் புதைபடிவ எலும்புத் துண்டுகள் இருப்பதைக் கவனித்தார். அத்துடன் இரண்டு ஆண்டுகள் அவ்வகழிடத்தின் செயற்பாடுகளையும் கவனித்துவந்தார். 1968ல் அகழிடத்தில் தான் கண்ட மனித எலும்புகள் குறித்து, டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த இசாசி சுசுக்கி என்பவருக்கு ஒயாமா அறிவித்தார். சுசுக்கி தலைமையிலான குழுவொன்று 1968, 1970, 1974 ஆகிய ஆண்டுகளில் அவ்விடத்தில் ஆய்வுகளை நடத்தினர். 1982ல் கண்டுபிடிப்புக்கள் வெளியிடப்பட்டன. கண்டெடுத்த எலும்புக்கூடுகள் தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள மானிடவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia