மிருதுளா முகர்ஜி
மிருதுளா முகர்ஜி (Mridula Mukherjee) என்பவர் இந்திய வரலாற்றாசிரியர், இந்திய விடுதலை இயக்கத்தில் விவசாயிகளின் பங்கு பற்றிய தனது பணிக்காக அறியப்பட்டவர். இவர் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் முன்னாள் இயக்குநராக உள்ளார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்விமுகர்ஜி 1950-ல் இந்தியாவின் புது தில்லியில் பிறந்தார். இவரது பெற்றோர், வித்யா தர் மகாஜன் மற்றும் சாவித்ரி ஷோரி மகாஜன் ஆவர். இவர்கள் லாகூரில் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களாக இருந்தனர். இவர்கள் 1947-ல் இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து புது தில்லிக்குக் குடிபெயர்ந்தனர்.[1][2] இவரது சகோதரி, சுசேதா மகாஜன், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுப் பேராசிரியராக உள்ளார்.[3] இவரது சகோதரர் அஜய் மகாஜன் ஆவார்.[2] முகர்ஜி வரலாற்றாசிரியர் ஆதித்ய முகர்ஜியை மணந்தார். இவர்களுக்கு மாதவி என்ற மகள் உள்ளார்.[2] முகர்ஜி புது தில்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1971-ல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டதாரியாகச் சேர்ந்தார். பின்னர் இப்பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டமும் பெற்றார்.[4] இவரது முனைவர் பட்ட ஆய்வு ஆலோசகராக பிபன் சந்திரா செயல்பட்டார்.[5] பணி1972 ஆம் ஆண்டில், தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையில் பணிபுரியும் போது, முகர்ஜி வரலாற்று ஆய்வுகள் மையம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார்.[5] இங்கிருந்து இவர் வரலாற்றுப் பேராசிரியராகப் பணி ஓய்வு பெற்றார். வரலாற்றாய்வு மையத்தின் தலைவராகவும் இருந்தார். 2005ஆம் ஆண்டில், புது தில்லி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆராய்ச்சிமுகர்ஜி பஞ்சாபில் விவசாய வரலாற்றை ஆராய்ந்தார். விரிவான நீர்ப்பாசனப் பணிகள் இருந்தபோதிலும், காலனியாதிக்கம் விவசாயத்தில் ஊடுருவலை ஏற்படுத்தியது. ஒரு பகுதியில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, உற்பத்தி குறைகிறது என்று இவர் வாதிட்டார். 1947க்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டங்களில் பஞ்சாபின் பழைய சமஸ்தானங்களில் விவசாயிகளின் இயக்கங்களையும் இவர் ஆய்வு செய்தார். விவசாயி நனவின் மார்க்சிய நோக்கு நிலை பற்றிய இவரது விமர்சன பகுப்பாய்வு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.[6] முகர்ஜியின் படைப்புகளில் இயங்கும் ஒரு பொதுவான நூல், பிந்தைய காலனித்துவ வரலாற்று விசாரணை முறையின் விமர்சனமாகும்.[7] இது விவசாய இயக்கங்கள் குறித்த இவரது முக்கிய பங்களிப்பு ஆகும். நவீன இந்திய வரலாறு பற்றிய இவரது பகுப்பாய்வைத் இது தெரிவிக்கிறது. பிபன் சந்திரா மற்றும் பலர் இணைந்து எழுதிய இரண்டு புத்தகங்களில் இது இணைக்கப்பட்டுள்ளது. அவை: இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா: 1947-2000 . முந்தைய புத்தகத்தில், ஆசிரியர்கள் "இந்தியாவில் காலனித்துவம் மற்றும் தேசியவாதம் பற்றிய எழுத்தில் கேம்பிரிட்ஜ் மற்றும் பிந்தைய காலனித்துவ 'கொள்கைகள்' செல்வாக்கை மாற்ற முயன்றனர்.[8] கருத்தியல்முகர்ஜி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட பிறகு, பிப்ரவரி 2008 மற்றும் சூன் 2009க்கும் இடையில் எழுதப்பட்ட இரண்டு கடிதங்கள் மற்றும் ராம்சந்திர குஹா மற்றும் சுமித் சர்க்கார் உட்பட பல்வேறு கல்வியாளர்களால் கையெழுத்திடப்பட்ட இரண்டு கடிதங்கள் நூலக நிர்வாகக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. இது மையத்தின் அறிவார்ந்த தரநிலைகள் சீர்குலைந்ததாகத் தெரிவித்தது.[4][9][10] முகர்ஜிக்கு ஆதரவாக, இர்பான் ஹபீப் மற்றும் மது கிஷ்வர் உட்பட மற்றொரு கல்வியாளர்கள், இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள். முகர்ஜியின் பதவிக் காலத்தில், ஜெயப்பிரகாஷ் நாராயணின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் பத்து தொகுதி வெளியீடுகளின் எண்ணிம மயமாக்கல் திட்டம் முடிவடைந்தது.[4][11][12] முகர்ஜிக்கு எதிராக அனுப்பப்பட்ட மனுவை நிராகரித்த நிர்வாகக்குழு முகர்ஜியின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்தது.[4] இவரது நியமனம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இவரை மாற்றி புதியவரைத் தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் செயல்பாடு நீதிமன்ற வழக்கு காரணமாக முடிவுக்கு வந்தது. தில்லி உயர் நீதிமன்றம் முகர்ஜிக்குப் பதிலாக புதியவரை நியமிக்க நடைபெற்ற நியமனம் தவறானது மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி தடை விதித்தது.[13] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia