மிர்-675 குறு ஆர்.என்.ஏ முன்னோடிக் குடும்பம்

மிர் 675 குறு ஆர் என் ஏ முன்னோடிக் குடும்பம் (MiR-675 microRNA precursor family) என்பது மூலக்கூற்று உயிரியலில் சிறிய இரைபோ கருவமில (ஆர். என். ஏ.) மூலக்கூறு ஆகும். இந்த குறு ஆர்.என். ஏ, பல்வேறு செயற்பாடுகள் மூலம் மரபணு பண்புகள் வெளிப்படுவதை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்கிறது.

செல் பிரிதலைத் தடுத்தல்

மிர்-675-இன் அதிவெளிபாடு, கரு நிலை மற்றும் கருசூழ் படல குருத்தணுக்களின் பெருக்கத்தினைக் குறைக்கிறது. இது பிறப்பதற்கு முன் நஞ்சுக்கொடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிலுள்ள, பெரிய, மரபணுக்களுக்கிடையே குறியீடற்ற ஆர்.என்.ஏ "எச்.19"-இன் முதல் பயனறியா மரபணுக்கோர்வையில் (exon) உட்பொதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. "எச்.19" இல்லாத நஞ்சுக்கொடிகளில் மிர்-675 இன் இலக்குகள் அதிகமாக உள்ளது; இதில் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி 1 ஏற்பியும் (IGF1R) அடங்கும். இதனால் மிர்-675 இல்லாத தொப்புள்கொடி தொடர்ந்து வளர்கிறது."எச்.19" இலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட மிர்-675 -இன் வெளியீட்டினால், உயிரணு இறுக்க- அல்லது புற்றுநோய் உருவாக்க- சமிக்ஞைகளினால் ஏற்படும் செல் பெருக்கத்தை விரைவாகத் தடுக்கும் சாத்தியம் உள்ளது.[1]

கீல்வாதம் கட்டுப்படுத்துதல்

மிர்-675, "எச்.19" உடன் ஒருங்கே கீல்வாத குருத்தெலும்புகளில் உயர்சீரமைப்பு உடையதாக கண்டறியப்பட்டுள்ளது.[2] உண்மையில், இந்த இரண்டு ஆர்.என்.ஏக்களும் இணை-ஒழுங்குமுறையில் உள்ளது. மிர்-675-இன் அதிவெளிப்பாட்டினால் சாதாரண திசுவுடன் ஒப்பிடும்போது மாற்றப்பட்ட வெளிப்பாடு அளவுகள் மூலம் கீல்வாதம் தொடர்புடைய (COL2A1) மரபணு உயர்சீரமைப்பு அடைகிறது. மிர்-675, இதுவரை அறியப்படாத இலக்கு மூலக்கூறு வழியாக இணைப்புதிசு வெண்புரதம் இரண்டாம் வகையின் (Collagen type II) அளவை மாற்றியமைக்ககூடும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் இந்த குறு ஆர்என்ஏ, கீல்வாதத்தில் உள்ள வளர்சிதை மாற்ற சமநிலையைக் கண்டறியும் சுட்டியாகும் சாத்தியமும் உள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya