மில்லிமீட்டர்
மில்லிமீட்டர் (மில்லிமீற்றர்) என்பது நீள அலகுகளில் ஒன்றாகும். ஒரு மீட்டரின் ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு மில்லிமீட்டர் ஆகும். இது 0.039 அங்குலத்துக்குச் (inch) (துல்லியமாக 5/127) சமனானது. மீட்டர் அளவை முறையைப் பயன்படுத்தும் நாடுகளில் சிறிய நீள அளவைகளை அளப்பதற்குப் பயன்படும் அலகு இதுவே. எடுத்துக்காட்டாகக் கண்ணாடித் தகடுகளின் தடிப்பு 6 மில்லிமீட்டர், 10 மில்லிமீட்டர் என்றும் சுவர்களின் தடிப்பைக் குறிப்பிடும்போது 100 மில்லிமீட்டர், 200 மில்லிமீட்டர் எனவும், அறைகளின் நீள அகலங்களைக் குறிப்பிடும்போது 4000 x 5000 மில்லிமீட்டர் எனவும் குறிப்பிடுவது உண்டு. மில்லிமீட்டரைச் சுருக்கமாக மிமீ. என்று எழுதுவது வழக்கம். மில்லிமீட்டருக்கு ஒத்த பரப்பளவு அலகு சதுர மில்லிமீட்டரும், கனவளவு அலகு கன மில்லிமீட்டரும் ஆகும். இவற்றை முறையே மிமீ 2 (மில்லிமீட்டர் இரண்டாம் அடுக்கு) என்றும் மிமீ 3 (மில்லிமீட்டர் மூன்றாம் அடுக்கு) என்றும் சுருக்கி எழுதுவது வழக்கம். தொடர்புகள்மீட்டர் அளவை முறையில் மில்லிமீட்டருக்கும் பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு:
மில்லிமீட்டருக்கும் இம்பீரியல் அளவை முறையில் உள்ள பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு:
சில தர அளவுகள்மில்லிமீட்டரில் தரப்பட்டுள்ள சில தர அளவுகள் வருமாறு:
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
|
Portal di Ensiklopedia Dunia