மிஸ்ஸியம்மா
மிஸ்ஸியம்மா (Missiyamma) 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] எல். வி. பிரசாத் இயக்கத்திலும் பொம்மிரெட்டி நாகிரெட்டி, அலுரி சக்ரபாணி ஆகியோரின் தயாரிப்பிலும் வெளிவந்தது. சி.பி. ஜம்புலிங்கம் மற்றும் கல்யாணம் ஆகியோர் திரைப்படத்தினை எடிட் செய்திருந்தனர். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இரண்டிலும் வேறு வேறு நடிகர்கள் நடித்திருந்தனர். தெலுங்குத் திரைப்படத்தில் என். டி. ராமராவ், சாவித்திரி,[2] அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா மற்றும் எஸ். வி. ரங்கராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் ஜெமினி கணேசன், கே. ஏ. தங்கவேலு, மா. நா. நம்பியார் மற்றும் கே. சாரங்கபாணி ஆகியோர் முறையே ராமாராவ், நாகேஷ்வர ராவ், ரமணா ரெட்டி மற்றும் வெங்கட ரமஸ் ஆகியோரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். 12 ஜனவரி 1955 இல் பொங்கல் விடுமுறை நாட்களில் மிஸ்ஸியம்மா திரையிடப்பட்டது. தமிழிலும், தெலுங்கிலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இத்திரைப்படம் நடிகை ஜமுனாவிற்கு புகழைப் பெற்றுத் தந்தது. இத்திரைப்படம் இந்தியில் மிஸ் மேரி என்ற பெயரில் எல்.வி. பிரசாத்தின் இயக்கத்திலேயே 1957ம் ஆண்டு வெளிவந்தது. நடிகர்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia