மிஹிர் கோஸ்வாமி
மிகிர் கோசுவாமி (Mihir Goswami) மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்க சட்டமன்றத்தில் 1996–2001 மற்றும் 2016–2021 ஆகிய காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] தொகுதிமிகிர் கோசுவாமி கூச் பெகர் தெற்கு சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2][3] அரசியல் கட்சிமிகிர் கோசுவாமி பிளவுபடாத இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரசு தலைவராக இருந்தார். இதே நேரத்தில் மம்தா பானர்ஜி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். 1996-ஆம் ஆண்டு கூச் பெகர் தெற்குச் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். 1998-ஆம் ஆண்டு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்து 2020-ஆம் ஆண்டு வரை இருந்தார். இதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினார்.[4][5] வெளி இணைப்புகள்West Bengal Legislative Assembly மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia