மீண்டும் ஒரு மரியாதை
மீண்டும் ஒரு மரியாதை (Meendum Oru Mariyathai) பாரதிராஜா எழுதி, இயக்கி 2020இல் வெளியான இந்திய தமிழ் திரைப்படம் .[1] பாரதிராஜா, நட்சத்திரா, ஜோ மல்லூரி மற்றும் மௌனிகா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை மனோஜ் குமார் தனது மனோஜ் கிரியேஷன்ஸ் என்னும் படவுருவாக்க நிறுவனத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கான இசையை என்.ஆர்.ரகுநந்தன் அமைத்துள்ளார், பின்னணி இசையை சபேஷ்-முரளியும், ஒளிப்பதிவை சலாய் சாகதேவனும் மேற்கொண்டுள்ளனர். ஊட்டியில் நடைபெற்ற 2018இல் தெற்காசிய குறும்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.[2][3][4] நடிகர்கள்
முன் பணிகள்ஓம் என்ற படத்தில் பி.பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று 2014 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார் என்று கூறப்பட்டது. தலைப்பு "ஓல்ட் மேன்" என்பதன் சுருக்கமாகும்.[5] இருப்பினும், சில காரணங்களால், நிரதிய்குமார் இந்த திட்டத்தை இடையில் விட்டுவிட்டார்.[6][7] செயலற்ற ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு, படத்தின் தலைப்பு ஓம் இலிருந்து மீண்டும் ஓரு மரியாதை என அக்டோபர் 2019இல் மாற்றப்பட்டது.[8]
இப்படத்தின் ஒலிப்பதி என்.ஆர்.ரகுநந்தன், ஷரன் சூர்யா இரண்டு பாடல்களையும், யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலையும் இசையமைத்துள்ளனர். சரிகம என்ற பெயரில் இசை வெளியிடப்பட்டது.[9][10]
அதே மாதத்தில் முதல் முன்னோட்டப் படிமம் வெளியான பின்னர் படத்தின் அதிகாரப்பூர்வ குறு முன்னோட்டம் 21 சூலை 2018 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் கதைக்களம் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றியது என்று ஊகிக்கப்படுகிறது.[11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia